 புங்குடுத்தீவு ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பெண் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பெண் ஒருவரை அழைத்து வந்து கலாசார சீரழிவில் ஈடுபட்டமையை அனுமதிக்காது கண்டித்தமையை அடுத்தே பூசகரை அவரது உதவியாளரும் ஏனைய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். Read more
புங்குடுத்தீவு ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பெண் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பெண் ஒருவரை அழைத்து வந்து கலாசார சீரழிவில் ஈடுபட்டமையை அனுமதிக்காது கண்டித்தமையை அடுத்தே பூசகரை அவரது உதவியாளரும் ஏனைய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். Read more
 
		     கிளிநொச்சி கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்தின் கற்பகசமர் காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்றையதினம் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இதன்போது 2019ம் ஆண்டின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபாய் 250,000ஃ- பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட களஞ்சிய அறை பாராளுமன்ற உறுப்பினரால் திறந்துவைக்கப்பட்டது.
கிளிநொச்சி கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்தின் கற்பகசமர் காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்றையதினம் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இதன்போது 2019ம் ஆண்டின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபாய் 250,000ஃ- பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட களஞ்சிய அறை பாராளுமன்ற உறுப்பினரால் திறந்துவைக்கப்பட்டது.  திருகோணமலை மொரவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தாம் கட்டை காட்டுப் பகுதியிலிருந்து இன்று ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். காட்டுக்குச் சென்ற நபரொருவர் வழங்கிய தகவலை அடுத்து அப் பகுதியை சோதனையிட்ட போது கட்குவாரிக்கு அருகில் வு- 56 ரக துப்பாக்கி ரவைகள் 155 மற்றும் மெகசின் 4 மீட்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மொரவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தாம் கட்டை காட்டுப் பகுதியிலிருந்து இன்று ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். காட்டுக்குச் சென்ற நபரொருவர் வழங்கிய தகவலை அடுத்து அப் பகுதியை சோதனையிட்ட போது கட்குவாரிக்கு அருகில் வு- 56 ரக துப்பாக்கி ரவைகள் 155 மற்றும் மெகசின் 4 மீட்கப்பட்டுள்ளன.  திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய வளாக மலையில் இருந்து குதித்து இன்று காலை நபர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நிலையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மலையில் இருந்து குதித்து பலியாகியுள்ளார். உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஏ.செந்தூரன் (38-வயது) என்பவரே இவ்வாறு மரணமாகியுள்ளார்.
திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய வளாக மலையில் இருந்து குதித்து இன்று காலை நபர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நிலையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மலையில் இருந்து குதித்து பலியாகியுள்ளார். உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஏ.செந்தூரன் (38-வயது) என்பவரே இவ்வாறு மரணமாகியுள்ளார். சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதை முன்னிட்டு நாட்டின் சகல மதுபான கடைகளும் இன்று மூடப்படவுள்ளது. தடையுத்தரவுகளை மீறி மதுபான விற்பனை மற்றும் அது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை மதுபானம் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய 900 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.
சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதை முன்னிட்டு நாட்டின் சகல மதுபான கடைகளும் இன்று மூடப்படவுள்ளது. தடையுத்தரவுகளை மீறி மதுபான விற்பனை மற்றும் அது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை மதுபானம் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய 900 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.  காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். வேறுசிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாக கொடுத்து மோசடி செய்துள்ளனர் என வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்திருந்த அமைச்சர் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். வேறுசிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாக கொடுத்து மோசடி செய்துள்ளனர் என வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்திருந்த அமைச்சர் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,  இலங்கையில் ஒவ்வொரு வருடமும் மார்பக புற்றுநோய் காரணமாக சுமார் 700 பேர் வரையில் மரணமடைவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று சுகாதார கல்விப் பணிமனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் மார்பக புற்றுநோய் காரணமாக சுமார் 700 பேர் வரையில் மரணமடைவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று சுகாதார கல்விப் பணிமனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  யாழ். புங்குடுதீவில் பூசகர் ஒருவர் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு சடலம் அங்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று அதிகாலை கண்டறியப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ். புங்குடுதீவில் பூசகர் ஒருவர் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு சடலம் அங்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று அதிகாலை கண்டறியப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கும் ஒரு சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கண்டியில் நேற்று நடந்த சிறுவர்தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கும் ஒரு சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கண்டியில் நேற்று நடந்த சிறுவர்தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.  நாட்டின் பல பிரதேசங்களில் விசர்நாய் கடிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனால் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்கும்படியும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. காலி யட்டலமத்த பிரதேசத்தில் ஒரே வாரத்தில் இரண்டு பேர் விசர் நாய் கடிக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களில் விசர்நாய் கடிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனால் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்கும்படியும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. காலி யட்டலமத்த பிரதேசத்தில் ஒரே வாரத்தில் இரண்டு பேர் விசர் நாய் கடிக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.