IMG_1264பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில், வவுனியா வடக்கு இளைஞர் சேவை அதிகாரி திரு. சதீஸ்குமார் தலைமையில் நேற்று முன்தினம் (15.01.2017)மாலை 4.30 மணிக்கு நெடுங்கேணி பெரியமடு பொதுநோக்கு மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு அதிதிகளாக வட மாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான திரு ஜி.ரி லிங்கநாதன் அவர்களும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதிகளாக நெடுங்கேணி வர்த்தக சங்கத் தலைவர் திரு. தேவராசா (கடாபி), இளைஞர் கழக வவுனியா நெடுங்கேணி பிரதேச சம்மேளன தலைவர் திரு சஞ்சீவன், வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் திரு பி.கெர்சோன், உறுப்பினர் கணேசலிங்கம் மாறன் ஆகியோருடன் கிராம சமூகமட்ட அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா விளையாட்டு கழகத்தின் ஆதரவில் கல்வியால் எழுவோம் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் பாடசாலை சிறுவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்விற்கு இங்கிலாந்தில் இருந்து அனுசரணை வழங்கிவரும் விளையாட்டுக்கழக தலைமைக்குழுவினரான கனகரத்தினம் மோகன்ராஜ், தர்மலிங்கம் மணிபல்லவன், செல்வரத்தினம் சுரேஸ் கருணாநிதி இனியன் ஆகியோருக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_1261 IMG_1263 IMG_1270 IMG_1280 IMG_1286 IMG_1290 IMG_1298 IMG_1303