sdfgfபெற்றோலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம், எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோலியத்துறை ஊழியர்கள் சேவைக்குத் திரும்பியுள்ளனர்.

இதனால் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. அத்தியாவசிய சேவை என்பதால் தாம் மீண்டும் சேவைக்குத் திரும்ப இணங்கியதாக பெற்றோலிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக எண்ணெய் தாங்கியை சீனாவிற்கு வழங்கல், சீனக்குடா துறைமுகத்தின் எண்ணெய் தாங்கியை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்கல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.