Posted by plotenewseditor on 2 July 2017
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 2 July 2017
Posted in செய்திகள்
ஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலாளர் காரியாலயம் மூடப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. கபே வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த காரியாலயத்தில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை விசாரித்து காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கும், ஏனைய நிறுவனங்களுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கும் பணியை குறித்த குழு முன்னெடுத்துவந்தது.
இந்த ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 800 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 250 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டு அதன் அறிக்கைகள் காவல்துறை நிதிமோசடி விசாரணை பிரிவிடம் சமரப்பிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 2 July 2017
Posted in செய்திகள்
மேலும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரட்டைக் குடியுரிமையினை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் தம்வசம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்வசம் உள்ள தகவலுக்கு அமைய அமைச்சர் ஒருவர் சுவிஸ்சலாந்துடனான இரட்டைக் குடியுரிமையை கொண்டுள்ளதாகவும், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனடா இரட்டைக் குடியுரிமையினையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Read more