 காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தமது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தமது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்பேற்று இவ்வாறு பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை உரிய வகையில் பயன்படுத்தி இடம்பெற்ற பாரிய இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமை காரணமாக ஜனாதிபதியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னண்டோ மற்றும் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவையும் கைது செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸவால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.