Header image alt text

மன்னார் நுழைவாயிலில் படையினர் விற்பனை நிலையம்

vegetable_71_CIமன்னார் நுழைவாயிலில் படையினர் மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றை திறந்து குறைந்த விலையில் மரக்கறிவகைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மன்னார் மரக்கறி விற்பனையாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு  பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். Read more

ஜனாதிபதி தேர்தல் விவகாரம் கட்சிகளுடனான பல்முனை சந்திப்புகள் சூடுபிடிப்பு.

sriஅடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தங்களுடைய பங்காளிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்தனியாக சந்தித்துவருகின்றார். இதன் ஒரு கட்டமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்தவாரம் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதேவேளை, Read more

இனப்படுகொலை பிரேரணையை ஏற்க வடக்கு மாகாணசபை மறுக்கிறது- சிவாஜிலிங்கம்.

imagesCA52LB32இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்ற பிரேரணை வடக்கு மாகாணசபையில் ஏற்கப்பட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், இல்லையேல் தமது உறுப்பினர் பதவியைத் துறந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ‘தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இங்கு இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டும், வட மாகாணசபை அது தொடர்பான தனது பிரேரணையை கடந்த ஐந்து மாதங்களாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது என்று சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியிருக்கின்றார். ‘இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவை நடத்திவருகின்ற விசாரணைகள் இம்மாதம் 31 ஆம் திகதியுடன் முற்றுப் பெறவுள்ள இந்த சந்தர்ப்பத்தில்’ இந்தப் பிரேரணை முக்கியத்துவம் பெற்றிருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிவாஜிலிங்கத்தின் பிரேரணையானது தேசிய அளவில் முக்கியத்துவம் மிக்கது என்பதால் தன்னால் அது தொடர்பில் முடிவெடுக்க முடியாது என்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் கவனத்திற்கு அதனைக் கொண்டு வந்ததாகக் கூறினார். கூட்டமைப்பின் தலைமை இது தொடர்பாக அதன் இணைப்புக்குழு கூட்டத்திலும் உயர்மட்டக் கூட்டத்திலும் ஆராய்ந்து 11 விடயங்களை உள்ளடக்கி முதலமைச்சருக்குத் தெரிவித்திருந்ததாகவும் சிவஞானம் கூறினார். ‘கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில், இனப்படுகொலை என்ற சொற்பதம் தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்திருந்த தலைவர் சம்பந்தன், இந்தப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான சமயம் இதுவல்ல என கூறியிருந்தார். இதுதான் கூட்டமைப்பின் நிலைப்பாடும் ஆகும்’ என்றார் சிவஞானம்.

ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் ஐதேக மீது ‘புலி முத்திரை’

imagesCA7JKKB4இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் (2015) ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ‘ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். எந்தத் திகதியில் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் திகதி உறுதிப்படுத்தப்பட்டவுடன் அதனைக் கூறுகின்றேன்’ என்று கூறினார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல. இலங்கையில் ராஜபக்ஷ ஆட்சியை அகற்றும் நோக்குடனேயே விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் 2006-ம் ஆண்டில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட விடயத்தில் நடைமுறை ரீதியான தவறுகள் நடந்திருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஜனவரியில் நடக்க இருக்கின்ற சூழ்நிலையில், விடுதலைப் புலிகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளூர் அரசியல் மேடைகளில் முக்கிய பிரசார விடயமாக சூடுபிடித்திருக்கிறது. ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய லண்டன் பயணம் தொடர்பில் அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய லண்டன் விஜயத்தையும் தொடர்புபடுத்தி கொழும்பின் தெருக்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. Read more

ரஜினிகாந் மேனகாகாந்தி ஆகியோருக்கு நன்றிக் கடிதம் – ஜெயலலிதா

Tamil_News_476707100869நடிகர் ரஜினிகாந்துக்கு ஜெயலலிதா அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-  நேற்று தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு என் மீதான கனிவு மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுக்கு நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் வாழவும், அனைத்து நடவடிக்கைகளிலும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். எனது வாழ்த்துக்களை உங்களது குடும்பத்தினர் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

மத்திய மந்திரி மேனகா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தங்களது கடிதம் எனது மனதை ஆழமாக தொட்டு நெகிழ வைத்து விட்டது. பணிச்சுமை அதிகரித்த நிலையிலும் என்னை நினைத்து கடிதம் எழுதியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் இறைவன் நன்மை புரியவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்தக் கடிதங்களில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். மத்திய மந்திரி மேனகாகாந்தியும், ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதில், ”தங்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதுடன் தனது ஆதரவு, அனுதாபம் ஆகியவை எப்போதும் தங்களுக்கு உண்டு. இந்த தருணத்தில் மகிழ்ச்சியுடன் உங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். மீண்டும் உங்கள் தலைமையில் ஆட்சி நிர்வாகம் அமைவதை பார்க்க முடியும் என்பதை உறுதியாக கூறுகிறேன்” என்றார்.

ரஜினிகாந்த் வாழ்த்து சொன்னதில் எந்த தவறும் இல்லை – முரளிதரராவ்

BJP_SECVPFரஜினிகாந்த், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது சகஜமானதுதான். இதில் எந்த அரசியல் முக்கியத்துவம் இல்லை, தவறும் இல்லை. ரஜினிகாந்த் சிறந்த மனிதர். மக்கள் செல்வாக்கு படைத்தவர். அவரை போன்ற பிரபலங்கள், நல்லவர்கள் பாரதீய ஜனதாவுக்கு வருவதை வரவேற்போம். தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் மத்திய மந்திரி மேனகாகாந்தி தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளார். அது பாரதீய ஜனதாவின் கருத்து அல்ல. மத்திய அரசை பொறுத்த வரை தூய்மையான நல்ல நிர்வாகத்தை கொடுப்பதில் உறுதியாக இருக்கிறது. சுப்பிரமணியசாமி பல விஷயங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிடுகிறார். அது அவரது சொந்த கருத்து தான். தமிழக பாரதீய ஜனதாவை பற்றி அவர் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. அதே நேரத்தில் கட்சியின் தமிழக தலைமை என்ன சொல்கிறதோ? அதை தான் கட்சி மேலிடம் கவனத்தில் கொள்ளும். தமிழகத்தில் கட்சியை அடி மட்டத்தில் இருந்து பலப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். இதற்கான பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும். மராட்டியம், அரியானாவில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளோம். இது மக்களுக்கு மோடி மீதான நம்பிக்கையை காட்டுகிறது. அதே போல் வருங்காலத்தில் தமிழகத்திலும் பா.ஜனதா பலம் வாய்ந்த கட்சியாக மாறும். அதற்கான பணிகளை செய்வோம். தமிழக சட்டமன்றத்தில் பாரதீய ஜனதாவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. ஆனால் தமிழரான தமிழ்ச்செல்வன் மராட்டிய சட்ட மன்றத்தில் பாரதீய ஜனதா பிரதிநிதியாக வெற்றி பெற்று இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு இந்த நேரத்தில் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் – த.வி.கூ. ஆனந்தசங்கரி

Snakari.எமக்கு வேண்டியது சமாதானம், ஒற்றுமையுடன் கூடிய இணக்கப்பாடு என்ற தலைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அருகதையுண்டா?  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்; பெயர்ந்த மக்களும் பிரிவினை கோருவதையும், தமிழீழம் அமைப்பதையும் கைவிடுவார்களேயானால் தாங்களும் நிறைவேற்று அதிகார முறைமையை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்தமையானது நாட்டிலுள்ள பல்லின மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனால் ஆதிக்கம் செலுத்துகின்ற புலம்பெயர்ந்தவர்களும் அவர்களில் தங்கியிருந்து செயற்படுகின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும்; இதற்கு சம்மதிக்கத் தயங்குவார்கள். எது எப்பிடியிருப்பினும் தங்களின் கூற்று உறுதியாக இருக்குமானால் இந் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சாதகமானதொரு நிலைமையை உருவாக்க பலர் தயாராகவே உள்ளனர். 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்களை நினைவூட்ட வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ புலம் பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினருக்கோ இப்பிரச்சினையில் தலையிடுவதற்கு அருகதையுண்டா  இல்லையா என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியும். Read more

ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந் கடிதம் 

imagesCA65KGRIசொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘நீங்கள் போயஸ் கார்டனுக்குத் திரும்பியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது நல்ல நேரத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்களது உடல் ஆரோக்கியத்துக்கும் மன அமைதிக்கும் எப்போதும் வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்’ என ரஜினி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா கைதால் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலை தங்களுக்கு சாதகமாக்கி, ரஜினியை பா.ஜ.க.வுக்குள் இழுக்க முயற்சிகள் நடந்து வருவதை அண்மைய சந்திப்புகள் உறுதி செய்து வருகின்றன. இந்நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு ரஜினி கடிதம் எழுதி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி அ.தி.மு.க.வினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட ரஜினி கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஜெயலலிதாவுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அண்மைய காலமாக நடந்தவை அனைத்தும் வருத்தத்துக்கு உரியது என்றும், ஜெயலலிதாவுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எல்லா பிரச்சினைகளும் இடர்பாடுகளும் விரைவில் முடிவுக்கு வந்து, மீண்டும் முறைப்படி நிர்வாகத்தில் ஈடுபடுவீர்கள் என அக்கடிதத்தில் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பிரஜைகள் வடக்கு செல்ல வீசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது.

thamil thesiya koottamaippu indiaவெளிநாட்டுப் பிரஜைகள் வடக்கிற்கு பயணம் செய்யும் போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் இந்த உத்தரவிற்கு எதிராக நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாக இலங்கைத் தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது அடிப்படை உரிமை மீறலாகும். பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளாகவே வாழ்ந்து வருவதாகவும். இவ்வாறான இலங்கைத் தமிழர்கள் வடக்கிற்கு செல்லும் போது பாரிய நெருக்கடிகளையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்க நேரிடும். பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் தங்களது பூர்வீக நிலங்களுக்கு செல்ல இவ்வாறு அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென நிபந்தனை விதிப்பது, அவர்களை அசௌகரியத்தில் ஆழ்த்தும். குறிப்பாக சொந்தங்களை பார்வையிடுவதற்கு, திருமண வைபவங்களில் பங்கேற்பதற்கு, வேறும் நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு இவ்வாறு தமிழ் மக்கள் வடக்கிற்கு பயணம் செய்வதற்கு. இனி வரும் காலங்களில் குறித்த தமிழர்கள் இரண்டு வீசாக்ளைப் பெற்றுக்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் செய்ய ஒரு வீசாவையும், இலங்கையிலிருந்து தமது பூர்வீக நிலமான வடக்கிற்கு பயணம் செய்ய மற்றுமொரு வீசாவையும் பெற்றுக்கொள்ள நேரிட்டுள்ளதாகதவும். இந்த நடவடிககையானது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் தடையை இரத்துச் செய்தமை குறித்து மிக உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறோம்.

புltte_eu_001லிகளின் தடையை இரத்துச் செய்தமை குறித்து மிக உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் போது அவை அந்த நாட்டின் சட்டத்திற்க்குட்பட்டதாகவும், அதனை பின்பற்றுவதாகவும் அமையவேண்டும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டேலி குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடையை இரத்துச் செய்தமை தொடர்பாக மிக உன்னிப்பாக ஆராய்ந்துவருகிறோம், சகலரினது கருத்துக்களையும் செவிமடுத்த பின்னரே பதிலளிப்போம், இந்த தருணத்தில் எதனையும் செய்ய முடியாது, இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சாதராணமான விடயம்,ஐரோப்பிய ஒன்றியம் ஜனநாய கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குகின்றது, நீதித்துறையும் அதன் செயற்பாடுகளும் சட்டத்தின் அடிப்படையிலேயே  அமைந்திருக்கும், ஐரோப்பிய ஒன்றியம், பயங்கரவாதத்தை எதிர்க்கின்றது, அதுவே அதன் நிகழ்ச்சி நிரலில் முக்கியமாக உள்ளது, இதற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுக்கிறோம்,பயங்கரவாதத்திற்க்கு எதிராகபோராடுவதற்க்கு அப்பால் அதற்கு எதிராக நாளாந்தம் நடவடிக்கைகளை எடுத்தவண்ணமுள்ளோம், ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்க்குட்பட்டவையே , நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஆராய்ந்துவருகிறோம், அதனை தொடர்ந்து செய்வோம், இலங்கை, பிரிட்டன் அல்லதுவேறு எந்த நாடாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மிக அவதானமாகவே முன்னெடுக்க வேண்டும், என்ன நடவடிக்கைகளை எடுத்தாலும் அது சட்டத்திற்க்குட்பட்டதாக ,அதனi பின்பற்றுவதாக அமையவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

யாழ் கொழும்பு கடுகதி ரயிலில் இருக்கை தட்டுப்பாடு

images1யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் பயணிப்பதற்கு அதிகளவானவர்கள் முன்வருவதால் அந்த ரயிலில் இருக்கை  தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் கூறினார். குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலுக்கான முற்பதிவுகள், மொபிட்டல் தொலைபேசி வலைப்பினூடாக மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் இருக்கைகள் அனைத்தும் முன்பாகவே முற்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. இந்நிலையில், முற்பதிவுகளை மேற்கொள்ளாமல் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் பயணிப்பதற்காக யாழ். புகையிரத நிலையத்துக்கு வருபவர்கள், இருக்கைகள் இன்மையால் தினமும் 250பேர் வரையிலானோர் திரும்பிச் செல்கின்றனர் என்று அவர் கூறினார். இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் ஏனைய ரயில்களில் முற்பதிவுகளை மேற்கொள்வதற்கான முற்பதிவு முறைமைகள் இன்னமும் சீராக இயங்கத் தொடங்கவில்லை. இதனால், முற்பதிவு செய்ய வருபவர்களை காத்திருக்க வைக்கவேண்டிய அதேவேளை, முற்பதிவுகள் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதே நேரம் யாழ் கொழும்பு ரயில் சேவையில் நான்கு நாட்களில் 18இலட்சம் ரூபா வருமானம்

குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலய பரிசளிப்பு விழா, சரஸ்வதி சிலை திறந்துவைப்பு-

kuppilan school 17.10 (1)யாழ். குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், சரஸ்வதி சிலை திறப்பு விழாவும் நேற்றுமாலை (17.10.2014) நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு. தம்பிராஜா தவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வைத்தியக்கலாநிதி கணேசலிங்கம் சுஜந்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. தில்லைநாதன் தர்மலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.  நிகழ்வில் ஆசியுரையினை சைவாகம ஜோதி சி.கிருஷ்ணசாமி குருக்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சரஸ்வதி சிலை திறப்புவிழா இடம்பெற்றது. சிங்கப்பூரில் வசிக்கின்ற குப்பிளான் விக்னேஸ்வரா வித்தியாலய பழைய மாணவர் திரு. கிருஷ்ணர் அவர்கள் இப்பாடசாலையில் சரஸ்வதி சிலையினைக் கட்டுவதற்கு அனுசரணை வழங்கி உதவியிருந்தார்.  புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சரஸ்வதி சிலையினை திறந்து வைத்து உரையாற்றினார். தொடர்ந்து பிள்ளைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது. அத்துடன் சிங்கப்பூரில் வசிக்கும் திரு. கிருஷ்ணன் அவர்களின் உதவியின்கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அப்பகுதியைச் சேர்ந்த 200பேருக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

kuppilan school 17.10 (1) kuppilan school 17.10 (2) kuppilan school 17.10 (4) kuppilan school 17.10 (5) kuppilan school 17.10 (7) kuppilan school 17.10 (8)

வடக்கு தொடரூந்து சேவையில் பாரிய லாபம்-

yaldeviவடக்கு தொடரூந்து போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 4 நாட்களில் 30 லட்சம் ரூபாவரை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் வணிகத்துறை பிரதானி ஜீ.டபிளியு. சிரிரகுமார தெரிவித்துள்ளார். புதிதாக பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரை தொடரூந்து சேவைகள் விஸ்தரிக்கப்பட்டதன் பின்னர் அதிகளவிலான பயணிகள் தொடரூந்து சேவையை நாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குளிரூட்டப்பட்ட நகரங்களுக்கு இடையிலான தொடரூந்து சேவை பெட்டிகளில் மாத்திரம் பயணித்தவர்களிடம் இருந்து சராசரியாக 5 லட்சம் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. இதுதவிர, சாதாரண சேவைகளின் போதும் அதிகளவான பயணிகள் தொடரூந்தை பயன்படுத்துவதாக வணிகத்துறை பிரதானி ஜீ.டபிளியு. சிரிரகுமார குறிப்பிட்டுள்ளார். எனினும், அதிகளவு லாபம் ஈட்டப்பட்டபோதிலும், அவற்றில் ஒரு தொகை பராமரிப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க…. Read more

யாழ். கோண்டாவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா-2014-

kondavil hindu price giving 17.10 (12.)யாழ். கோண்டாவில் இந்துக்கல்லூரியின பரிசளிப்பு விழா-2014 இன்றுமுற்பகல் 10 மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு. தவகீஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சுவாமிஜீ பிரமச்சாரி ஜாக்ரத சைதன்ய (சின்மயா மிஷன்) ஆச்சாரியார் அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. கந்தையா கேதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களும் பெருமளவாக இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இன்றைக்கு பல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பெரிய பாடசாலைகளை நோக்கி அனுப்புகின்ற ஒரு மனநிலையிலேயே இருக்கின்றார்கள் இதனால் சிறிய பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் தொகை குறைந்துகொண்டே வருகி;ன்றது. சமுதாயம் இன்று இருக்கின்ற நிலையில் நீங்கள் உங்கள் பிள்ளைகளை பெரிய பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக வெகு தொலைவிற்கு அனுப்பிவிட்டு பிள்ளைகள் திரும்பி வரும்வரையில் நீங்கள் பயந்து கொண்டிருக்கும் நிலை உள்ளது ஒரு விடயமாகும். மற்றையது உங்கள் சொந்த ஊர்ப் பாடசாலைகளினுடைய வளர்ச்சியினையும் அது தடுக்கின்றது. ஆகவே இதைவிடுத்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் ஊர்ப் பாடசாலைகளிலேயே கல்வி கற்பிப்பதன்மூலம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி, பாடசாலைகளின் வளர்ச்சி, கிராமத்தின் கல்வி வளர்ச்சி என்பவற்றை உறுதிசெய்து கொள்ள முடியும். இப்போது கிராமிய பாடசாலைகளில் இருக்கின்ற அதிபர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பிள்ளைகளின் கல்வியிலே மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றார்கள். ஆகவே நீங்கள் கூடுமானவரையில் உங்கள் பிள்ளைகளை உங்களுடைய கிராமத்துப் பாடசாலைகளுக்கு அனுப்புவதன்மூலம் உங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியையும், இந்தப் பாடசாலைகளின் வளர்ச்சியினையும் உங்கள் கிராமத்தின் கல்வி வளர்ச்சியினையும் உறுதிசெய்யுங்கள் என்று தெரிவித்தார்.

kondavil hindu price giving 17.10 (41)kondavil hindu price giving 17.10 (43)kondavil hindu price giving 17.10 (3)kondavil hindu price giving 17.10 (8)kondavil hindu price giving 17.10 (4)kondavil hindu price giving 17.10 (14)kondavil hindu price giving 17.10 (10)kondavil hindu price giving 17.10 (11.)kondavil hindu price giving 17.10 (2)kondavil hindu price giving 17.10 (12.)kondavil hindu price giving 17.10 (23)kondavil hindu price giving 17.10 (22)kondavil hindu price giving 17.10 (21)kondavil hindu price giving 17.10 (20)kondavil hindu price giving 17.10 (18.)kondavil hindu price giving 17.10 (17.)kondavil hindu price giving 17.10 (39)kondavil hindu price giving 17.10 (37)kondavil hindu price giving 17.10 (34)kondavil hindu price giving 17.10 (32)kondavil hindu price giving 17.10 (24)

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிணையில் செல்ல அனுமதி-

Tamil_News_884116768837தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு, இந்திய உயர் நீதிமன்றம் இன்றுபகல் நிபந்தனையுடனான பிணையை வழங்கியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு பிணை கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே பெங்களுர் மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் மீள்முறையீடு செய்யப்பட்டது. இதனை இன்று விசாரணை செய்த இந்திய உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் தரப்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ காரணங்களை கருதி, அவரை நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்தமை தொடர்பான வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க பொதுச்செயலளருமான ஜெயலலிதா ஜெயராம், அவரின் தோழியான சசிகலா, சசிகலாவின் உறவினர்களான வி.சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகளாக காணப்பட்டதுடன் இவர்கள் நால்வருக்கும் 4 வருட சிறைத்தண்டனை விதித்து பெங்களுர் தனி நீதிமன்ற நீதிபதி ஜோன் மைக்கல் டி குன்ஹா கடந்த மாதம் 27 திகதி தீர்ப்பளித்திருந்தார். ஜெயலலிதாவுடன், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் இன்று பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிபதி அளித்த தீர்ப்பையும் இந்திய உயர் நீதிமன்றம் இடைநிறுத்தி வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் இடாப்பில் இருந்து பொன்சேகா பெயர் நீக்கம்-

untitledஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் பெயரை 2014 வாக்காளர் இடாப்பிலிருந்து அகற்றுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் தேர்தல்கள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யு.அமரதாஸ இதனை ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக்கொடி வழக்கு மற்றும் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் 3 வருட சிறைத்தண்டனையும், அதற்கு முன்னர் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் அவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இத் தீர்ப்புகளின் காரணமாக சுமார் 3 வருடங்கள் சரத் பொன்சேகா சிறைத்தண்டனையை அனுபவித்திருந்தார். எனினும் அவரது சிறைத்தண்டனை முடிவடைவதற்கு இரு மாதங்கள் இருக்கையில் அரசியலமைப்பின் 34வது பிரிவின்மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி, பொதுமன்னிப்பின்கீழ் சரத் பொன்சேகாவை விடுதலை செய்திருந்தார். Read more