Header image alt text

கூட்டமைப்பு (புளொட்) பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று, கவலைக்கிடமாக இருந்த இரு அரசியல்கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வந்த இரு அரசியல் கைதிகள் ‘புளொட்’ அமைப்பை சேர்ந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர்.

மேற்படி உண்ணாவிரதத்தில், ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்ட நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற வழக்கு யாழ்  மேல் நீதிமன்றத்தினால் அவற்றை நிராகரித்து விடுதலை செய்யப்பட்ட சிவராஜா ஜெனிபர் 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையிலும்; இவருடன் மற்றுமொரு அரசியல் கைதியான  வவுனியா நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் முருகேசு கோமகன் 8 நாட்கள் உண்ணராவிரதம் இருந்து  வந்த நிலையிலும் பொலநறுவை பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். Read more

மேய்ச்சல் நிலத்தில் பயிர்ச்செய்கை சட்டவிரோத செயல் நீதிமன்றம் தீர்ப்பு

batticaloa_grass_landகால்நடை அபிவிருத்திப் பணிகளுக்காக அம்பாறை, பானம பகுதியில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலங்களில் பலவந்தமான முறையில் முஸ்லிம் மக்கள் நுழைந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டமை சட்டவிரோதமான செயல் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்ப்பளித்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட நிலங்களில் விவசாய நடவடிக்ககளை மேற்கொள்வதை முற்றாகத் தடை செய்த நீதிமன்றம் கால்நடை அபிவிருத்திப் பணிகளுக்காக அதனை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்க்கும் தீர்மானித்துள்ளது. Read more

தமிழ் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
 
tamilprisonersthirddayfastதடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாக, பொலிசார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றில், இந்தக் குற்றப் பத்திரிகைகளை, சட்ட மா அதிபர் தாக்கல் செய்ய உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

சம்மந்தப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே, அவர்கள் இதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து, இந்தக் கைதிகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ் கைதிகளுக்கு, இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பைச் சேர்ந்த அருட்தந்தை எம் சத்திவேல் தெரிவித்தார்.

சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்காகவே, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அவர் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, போலிசார் தம்மிடம் பெற்றுக்கொண்ட ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பயன்படுத்தி, இரண்டு வழக்குகளை தாக்கல் செய்துள்ளதை கண்டித்து, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் இரண்டு பேர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அருட்தந்தை சத்தியவேல் தெரிவித்தார்.

இவர்களது பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த, தமிழ் அரசியல் கைதிகள் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுளளார்.

கிராமிய இராஜ்ஜியத் திட்டத்திற்கு வடக்கு முதல்வர் எதிர்ப்பு

vikiஇலங்கை அரசாங்கத்தின் கிராமிய இராஜ்ஜியத் திட்டத்திற்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

2016ம் ஆண்டுக்கான வட மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தை நேற்று சமர்ப்பித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கிராமிய இராஜ்ஜிய திட்டத்தின் கீழ் நேரடியாக குழுக்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய மற்றும் மாகாண ரீதியான அபிவிருத்தித் திட்டம் குறித்த சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

இது மாகாண சபை மற்றும் அதன் அதிகாரங்களை புறந்தள்ளும் ஒரு செயற்பாடாகும் என வடக்கு முதல்வர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் 2016ம் ஆண்டுக்கான வட மாகாண சபை அபிவிருத்தி வேலைகளுக்கு மத்திய அரசாங்கம் 40 வீதமான நிதியை மட்டுமே வழங்கியுள்ளதாகவும் விக்னேஸ்வரன் இதன்போது குற்றம்சாட்டினார்.

டக்ளஸ் மீதான வழக்கு: 18 சாட்சிகளுக்கு அழைப்பாணை
 
Indiaஇலங்கையின் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்கக் கோரிய வழக்கில், 18 சாட்சிகளுக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை (சம்மன்) அனுப்ப இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளைமேடில் 1986-ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், வழக்குரைஞர் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உட்பட 9 பேர் மீது சூளைமேடு பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், 1993-இல் டக்ளஸ் தேவானந்தா தலைமறைவானார்.

இதனால், அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது. இந்தநிலையில், இந்தியாவுக்கு வந்தால் தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாததால் காணொலிக் காட்சி மூலம் (வீடியோ கான்பரசிங்) ஆஜராக அனுமதிக்கக் கோரி டக்ளஸ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘காணொலிக் காட்சி மூலம் மனுதாரர் ஆஜராகலாம். நீதிமன்றம் கருதினால், நேரில் ஆஜராக வேண்டும். அப்போது போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்´ என உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை மாவட்ட 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், தேவானந்தா மீதான வழக்கை தனியாக பிரித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று காவல் துறை சார்பில் கோரப்பட்டது.

இதன்பேரில், வழக்கில் தொடர்புடைய 18 சாட்சிகளும் 2016 ஜனவரி 18-ம் திகதி நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப நீதிபதி சாந்தி உத்தரவிட்டார் என, தமிழக ஊடகமான தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்ட 10 வர்த்தகர்கள் கைது

tharasuமட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் முத்திரையிடப்படாத நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளைப் பாவித்து வர்ததக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 வாத்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அளவீட்டு அளவுகளும் நியமங்கள் சேவைகளும் திணைக்கள பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌஸாத் தெரிவிதிதார்.

கடந்த மூன்று தினங்களாக ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிரான், செங்கலடி, ஏறாவூர், மட்டக்களப்பு ஆகிய நகரங்களிலுள்ள அரிசி ஆலைகள், சில்லறைகடைகள், பொதுச்சந்தை, மீன்விற்பனை மையங்கள், பழக்கடைகள் உட்பட 80 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டன.

இதில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகளை பாவித்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த 10 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த மாதம் 6ம் 7ம் திகதிகளில் வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு
 
Pillayanகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் 25.12.2005 அன்று மட்டக்களப்பு புனித மரியாழ் தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு ஆராதணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சந்திரகாந்தனை கடந்த 2.12.2015 புதன்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தியிருந்தினர்.

அதன் போது சந்திரகாந்தனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இன்று புதன்கிழமை மீண்டும் நீதிமன்றில் சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

இணையத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை – ஐநா எச்சரிக்கை

united nationsமொபைல் தொலைபேசி மற்றும் இணையம் போன்றவை சக்தி வாய்ந்த கருவிகள் மட்டுமல்ல அவை பெரிய ஆயுதங்களாகவும் இருக்கக்கூடும். ஐ.நா மன்றம் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உருவாகும் வன்முறையைப் பற்றி எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. இந்த வன்முறை உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் போலவே அதே அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது குறிப்பாக உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தொழில் நுட்பம் நுழையக்கூடிய இந்த நேரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஐ.நா கூறுகிறது.

மேலும் அறிந்துகொள்ள.-http://www.bbc.com/tamil/global/2015/12/151125_womentechnology

 

 

தமிழக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள்

SL thamilarதமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக நீடித்த கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் இலங்கை அகதிகளின் சில முகாம்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி முகாமில் 200க்கும் அதிகமான வீடுகள் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் சிவகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே பழுதடைந்த நிலையில் இருந்தவந்த இந்த முகாம் வீடுகள், மழை வெள்ளத்தில் மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அகதிகளுக்கு அரசு வழங்கிவருகின்ற உதவித் தொகைகள் மிகவும் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் இந்த வீடுகள் நீண்டகாலமாக பராமரிக்கப்படாத நிலையில் இருந்துவந்ததாகவும் சிவகுமார் கூறினார். Read more

இரத்தினபுரி கஹவத்தை கொலைச் சந்தேக நபர் மேலும் ஆறு பெண்கள் கொலைச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டுள்ளார்.

dnaஇலங்கையில் இரத்தினபுரி கஹவத்தை பகுதியில் பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர், மேலும் ஆறு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று பெல்மதுளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரிடமிருந்து மீட்கப்பட்ட இரத்த கறைபடிந்த கத்திகள் மற்றும் ஆடைகளை மரபணு சோதனைக்குட்படுத்தியதில், கஹவத்தை கொட்டக்கெத்தன பகுதியில் கடந்த காலங்களில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட பெண்கள் ஆறு பேரின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். Read more

ததேகூ எம்.பி.க்களும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களாக நியமனம்.

tnaகடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர் பதவி ஆளுங்கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டது
இலங்கையில் முதற் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 மாவட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களாக இம்முறை நியமனம் பெற்றுள்ளனர். Read more

சென்னை பல்கலை. கருத்தரங்கில் (இலங்கைப் பூர்வீக) மாணவர் மீது ‘தாக்குதல்’ 

universityசென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த கருத்தரங்கு ஒன்றின்போது மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள இயற்கை ஆபத்து மற்றும் பேரிடர் ஆய்வு மையத்தின் சார்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கோபால்ஜி மாளவியா, மாநில தேர்தல் ஆணையத்தின் செயலரான ஜோதி நிர்மலா சாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். Read more

வடக்கில் இந்திய நிதியில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை கட்டிடம்.

hospitalவட மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 200 படுக்கை வசதிகளையுடைய வைத்தியசாலை விடுதிக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டம் இந்திய அரசாங்கத்தின் முழு நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படுவதாகவும், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
வவுனியா மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுமே இதன் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது கட்டமாக மருத்துவ உபகரணங்ள் மற்றும் தளபாடங்கள் போன்றவற்றையும் நோயாளர் விடுதிக் கட்டிடத்திற்கு பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தையும் இந்தியா பொறுப்பேற்றுள்ளது.
இதற்கு 100 மில்லியன் இலங்கை ரூபாய்கள் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறம்பொடை ஆற்றில் நீராடச் சென்ற குழுவினர் இரு பெண்கள் பலியாகியுள்ளனர்.

riverஇறம்பொடை ஆற்றில் நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை (13) 04.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிசார் தெரிவிக்கின்றனர். 26 வயதான ஆசிரியர் ஒருவரும் 33 வயதான தாதி ஒருவருமே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

புத்தளம் – அலாவத்த பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த ஒரு குழுவினர், திரும்பும் வழியில் இறம்பொடை ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் நீராடி விட்டு வெளியே வந்த பின்னும் குறித்த இரு பெண்களும் நீண்ட நேரம் நீரில் இருந்துள்ளனர்.

இதன்போது திடீரென ஆற்றின் நீர் மட்டம் அதிகரிக்க இருவருக்கும் நீரிற்குள் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்றையவர்கள் எவ்வளவோ முயற்சித்தும், இவர்களை காப்பாற்ற முடியவில்லை.

இந்தநிலையில் இருவரது சடலமும் இன்று காலை (14) கண்டுபிடிக்கப்பட்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா- பாக். நட்புறவு தான் தெற்காசியாவுக்கு நல்லது – சுஷ்மா

indian_pakistanஇந்தியாவுக்கும் அதன் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையில் நட்புறவற்ற போக்கு தொடர்ந்தும் நீடிக்குமானால் தெற்காசிய பிராந்தியம் அமைதியாகவும் செழிப்புடனும் இருக்க முடியாது என்பதை இரண்டு நாடுகளுமே உணர்ந்துள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தான் பாகிஸ்தானில் நடத்தியிருந்த பேச்சுக்கள் தொடர்பில் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
சர்ச்சையில் உள்ள பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவங்குவதற்கு இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளன.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் நடந்த தாக்குதல்களை அடுத்தே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன.
உறவுகள் முன்னேறுவதில் பயங்கரவாதமே தடைக்கல்லாக இருப்பதாக ஸ்வராஜ் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனையை பாகிஸ்தான் தான் ‘தீர்க்க’ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யேமென் சண்டையில் சவுதி , எமிரேட்ஸ் தளபதிகள் பலி

jemanயேமனில் {ஹத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையின்போது கொல்லப்பட்ட வெளிநாட்டு படையினரில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த அதிகாரி ஒருவரும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யேமன் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் போரிட்டு வரும், சவூதி தலைமையிலான கூட்டுப்படையினர் தங்கியிருந்த முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.
கொல்லப்பட்டவர்களில், சூடானியப் படையினர் ஒருவரும் அடங்குவார். யேமன் அரசாங்கத்திற்கும் {ஹத்தி கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

யாழில் 39,300 வீடுகள், 32,017 மலசலகூடங்கள், 13,711 கிணறுகள் தேவை

jaffnaயாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முழுமையாக 39,300 புதிய வீடுகளும், 32,017 மலசல கூடங்களும், 13,711 குடிநீர் பெறும் கிணறுகளும் அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற 2016ம் ஆண்டுக்கான நகரத்திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் தேசியத் தொழிற்சங்க ஒன்றியம் பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

unions_protesஇன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் தாம் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக இலங்கையின் தேசியத் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்ட சில பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதாரம்இ தபால்இ பொதுபோக்குவரத்து உள்ளிட்ட பல துறையினர் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர் நடவடிக்கையாக வரவு செலவுத் திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவதாக ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். Read more

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவட்ட அபிவிருத்தி குழுக்களுக்கான தலைவர் பதவிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படவில்லை.

sampanthan_maithripalaநாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக விளங்கினாலும் அரசாங்கத்துடனும் ஜனாதிபதியுடனும் நல்லிணக்கத்துடனேயே அது செயற்பட்டு வருவதாக பார்க்கப்படுகின்றது.
அதன் அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றக் குழுக்களின் துணைத் தலைவராக செயற்படுவதுடன், இந்த முறை வரவு செலவுத் திட்டத்துக்கும் அந்தக் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. Read more