Header image alt text

வட்டு.இந்து வாலிபர் சங்கத்தால் புத்தகபைகள் வெற்றிக்கிண்ணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

cவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மற்றும் இராமநாதன் கல்லூரி மாணவர்களுக்கு 15.01.2016 ஆகிய தைத்திருநாள் அன்று புத்தகபைகள் வழங்கப்பட்டுள்ளதுடன்

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரிக்கு 10 புதிய வெற்க்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

இவ் வெற்றிக்கிண்ணங்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமை செயலகத்தில் வைத்து கல்லூரி பிரதி அதிபர் இந்திரா தவநாயகம் அவர்களிடம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர்.கு.பகீதரனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. Read more

தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலய கால்கோள் விழா-(படங்கள் இணைப்பு)

IMG_3291வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் கால் கோள் விழா (14.01.2015) அன்றுகாலை 9மணிக்கு, வித்தியாலய அதிபர் திருமதி சி.பத்மநாதன் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தரம் 01ற்கு புதுமுக மாணவர்களை வரவேற்கும் இவ் கால் கோள் விழாவின் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் திரு எம்.பி.நடராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் திரு வே.கனகவேல்ராஜா ஆகியோருடன் இவ் நிகழ்வில் வித்தியாலய ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்து மஹிந்தவின் அறிவுரை

mahinda parliamentபுதிய அரசியலமைப்பு சீர் திருத்தம் ஒன்றை கொண்டு வரும் செயற்பாட்டை தற்போதைய அரசாங்கம் நேர்மையாக முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை மறைப்பதற்காக மக்களை ஏமாற்றும் நோக்கில் யோசனைகள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு ஒன்று தொகுக்கப்படுவதாக இருந்தால் அது பல்வேறு கட்டங்களாக இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ள அவர், முதல் கட்டமாக நிறைவேற்று அதிகார முறை நீக்கப்படுதல் மற்றும் தேர்தல் முறையில் திருத்தங்கள் மேற்கொள்ளல் ஆகியன இடம்பெற்ற பின்னரே ஏனைய நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேநேரம் புதிய அரசியலமைப்பு தொகுக்கப்படும் போது, நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் செயற்படுத்த முடியாத பகுதிகள் நீக்கப்பட வேண்டும. அதிகாரங்கள் பகிரப்படும் போது உள்ளூராட்சி மன்றங்கள் போன்ற கீழ்மட்ட அமைப்புக்கள் பற்றி நீண்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதன் கீழ் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக தேர்தல் ஒன்று நடத்தப்படுவது பொருத்தமானது என்றும். நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இடம்பெற்ற சொற்பொழிவின் போதே அவர் இவற்றை கூறியுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிக்க சர்வதேச மட்டத்தில் போட்டி நிலவுகிறது
 
maithriபுதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு நாட்டிற்குள் எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தற்போது அனைத்து உலக நாடுகளினதும் ஆசீர்வாதம் கிடைத்திருப்பதாகவும்.

இதன் காரணமாக அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் வழங்கிக் கொண்டிருக்காமல், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் பொறுப்பேற்ற வேலைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என பொலன்னறுவை நகரத்தின் சுற்றுவட்டப் பாதையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

தற்போதைய நிலமையில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்வதற்கு சர்வதேச நாடுகளுக்கிடையில் போட்டி நிலவுவதாகவும். சிறந்த அரச நிர்வாகம் மற்றும் சிறந்த வெளிநாட்டு கொள்கையுமே இதற்கு காரணம் என்றும் .

ஜேர்மனி அரசாங்கத்தினால் அந்த நாட்டுக்கு விஜயம் செய்யமாறு இந்த நாட்டு அரச தலைவர் ஒருவருக்கு 43 ஆண்டுகளின் பின்னர்,முதற்தடவையாக உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி கூறினார்.

காணாமல்போனோர் தொடர்பான  பிரதமரின் கருத்துக்கு பிரஜைகள் குழு கண்டனம்

missing_peopleஇலங்கையின் வடக்கே, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போர்க்காலத்தில் காணாமல்போனவர்களில் பலர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள கருத்தை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினர் கண்டித்திருக்கின்றனர்.

பிரதமரின் இந்தக் கருத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

பொங்கல் விழாவில் பல்வேறு விடயங்கள் பற்றி பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணாமல்போனவர்கள் பற்றிய பட்டியலை தயாரிப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

‘எங்களுடைய அந்தப் பட்டியலில் விபரம் இல்லாவிட்டால் காணாமல்போயிருப்பவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் இன்று உயிருடன் இல்லை என்பதைத் தெரிவிப்பதில் கவலையடைகிறேன். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், அத்தகைய நிலைமைக்கு இடமிருக்கின்றது’ என்றார் ரணில்.

பிரதமரின் இந்தக் கருத்து காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கும் தங்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும். காணாமல்போனவர்கள் பற்றிய விபரங்கள் பிரதமருக்கு தெரிந்திருக்கின்றது என்ற சந்தேகம் காணாமல்போயிருப்பவர்களின் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள சகாயம், இதுபற்றிய விபரங்களை பிரதமரிடமிருந்து தாங்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 இரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கத்தல் அரபு நாடுகளில் பங்குச் சந்தை வீழ்ச்சி
 
iranஇரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்ட பிறகு, சவுதி அரேபியப் பங்குச் சந்தை ஏழு சதவீதத்துக்கும் அதிகமான அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அரபு உலகில் பல நாடுகளில் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது

அரபு உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தையான சவுதி அரேபியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி பல நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் மற்றும் துபாய் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சியே காணப்பட்டன. Read more

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக நீங்களும் ஆலோசனை வழங்கலாம்

Contitionஅரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்காக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி இந்த வேலைதிட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 22ம் திகதி வரை கொழும்பு, கொம்பனிவீதியில் அமைந்துள்ள விசும்பாயவில் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்வாங்கு நடவடிக்கை இடம்பெறும் என்று அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக்கயை உள்வாங்கும் குழு தெரிவித்துள்ளது.

காலை 09.30 மணிமுதல் 4.30 மணிவரை பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இதில் அனைத்து பொது மக்களும் இணைந்து கொள்ளுமாறு அந்தக் குழு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இது தொடர்பாக 0112 437 676 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் 0112 328 780 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது – ஹியூகோ ஸ்வைர்

 Hugoநல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட இலங்கையின் முயற்சிகளுக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரித்தானியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தேர்தலுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

கிளிநொச்சியில் சில குடும்பங்களை சந்தித்து உரையாடியிருந்தேன். அவர்கள் தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பி வருகிறார்கள்.

தற்போது பொதுமக்கள் அச்சமற்ற சூழலில் இருக்கிறார்கள். ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுகின்றன.

நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டு சிறந்த நாடு உருவாக்கப்பட வேண்டும்.

இலங்கை சிறந்த எதிர்காலத்தை எட்டுவதற்காக பிரித்தானிய அரசாங்கம், பிரித்தானிய மக்கள் அனைவரும் எம்மால் முடியுமான எத்தகைய உதவிகளையும் வழங்கத் தயாராகவுள்ளோம்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், மனித உரிமைகளை மேம்படுத்தல், பொறுப்புக்கூறல், ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு நாம் தொடர்ந்தும் பங்களிப்புக்களை வழங்குவோம்.

 

pongal

இலங்கைவாழ் மற்றும் உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் அனைவருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

தைப்பொங்கல் என்பது தேசிய நிகழ்வு; அது யாழ்ப்பாண நிகழ்வல்ல – ரணில்

தைப்பொங்கல் என்பது தேசிய நிகழ்வு. அது யாழ்ப்பாண நிகழ்வோ இந்து நிகழ்வோ அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

உலக சுற்றுச்சூழலில் மாற்றங்கள் நிகழ்வது போன்று உலக அரசியலிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அவ்வாறு மாற்றமடையும் சூரிய வெளிச்சம் தற்போது முழு இலங்கைக்கும் கிடைத்துள்ளதுடன், அனைத்து இலங்கை பிரஜைகளும் தற்போது சூரிய வெளிச்சத்தை அனுபவிப்பதாக அவர் கூறினார்.

பிரித்தானிய பிரதமர் இலங்கைக்கு வருகை தந்தது இருண்ட யுகத்தில் என்றும் சூரிய வெளிச்சம் இருக்கும் தற்போதைய சூழலில் இலங்கைக்கு வருகை தருமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.

பாற்சோறு உணவை விட தைப்பொங்கல் உணவு சுவையானது என்றும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார நிலை சிறந்த மட்டத்தில் இருக்கும் என்றும் வடக்கு கிழக்கிற்கு ஒரு விசேட பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நான் தீவிரவாதியல்ல சிங்கள மக்களுடன் எதிர்ப்போ கோபமோ இல்லை- விக்னேஸ்வரன்

jaffna_pongall_009தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில்,

சர்வமதங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கதே. 1960 களில் சர்வமத சம்மேளனத்தின் உப செயலாளராக நான் இருந்தேன். Read more

2009ஆம் ஆண்டு காணாமல் போன இரு பிள்ளைகள் ஜனாதிபதியுடன் புகைப்படத்தில்

missing_children_with_maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படம் ஒன்றில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் காணாமல் போயுள்ள இரண்டு பேரை தேடிக்கண்டுபிடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயங்கரவாதப் புலனாய்வு காவல் துறையினர், காணாமல்போனவர்களின் அன்னையரிடம் உறுதியளித்திருப்பதாக அவர்கள் குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நெடுங்கேணி பெரியமடுவைச் சேர்ந்த காசிப்பிள்ளை ஜெயவதனி, நெடுங்கேணி சின்னபூவரசங்குளத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் சந்திராணி ஆகிய இரண்டு தாயார் கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு காவல்துறையினரின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களின் மகள் மற்றும் மகன் தொடர்பான வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது.
காசிப்பிள்ளை ஜெரோமி, யோகேஸ்வரன் மயூரன் ஆகிய இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளனர்.
பின்னர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது வெளியிடப்பட்ட தேர்தல் பிரசுரம் ஒன்றில் மைத்திரிபால சிறிசேன அந்த இருவருடன் ஏனைய சில மாணவ மாணவியரும் இருந்த புகைப்படம் வெளியாகியிருந்தது.
அத்துடன், அதே போன்ற வீடியோ காட்சியொன்றும் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டிருந்ததைக் கண்டு இந்தத் தாயார் இருவரும் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு புகைப்படத்திலும் காணொளியிலும் காணப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பயங்கரவாதப் புலனாய்வு காவல்துறையினர் இந்த அன்னையர் இருவரையும் நேற்று புதனன்று விசாரணை செய்து, அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டதுடன் காணாமல் போயுள்ள அவர்களின் பிள்ளைகள் இருவரையும் கண்டுபிடிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கின்றனர்.

வடக்கு மற்றும் தலைமன்னார் புகையிரத நேரங்களில் மாற்றம்.

yaltheviவடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரதங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி புதிய நேர விபரங்கள் வருமாறு,
யாழ்தேவி கல்கிஸ்ஸையில் இருந்து அதிகாலை 05.50 மணிக்கு புறப்பட்டு கொழும்பு கோட்டைவந்து அங்கிருந்து காலை 06.35 இற்கு யாழ் நோக்கி புறப்பட்டு. பிற்பகல் 02.37 இற்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்து, பிற்பகல் 03.20 ற்கு காங்கேசன்துறையை சென்றடையவுள்ளது.
பின்னர் யாழ்தேவி கொழும்பு நோக்கி புறப்படும் போது, காங்கேசன்துறையில் இருந்து காலை 08.25 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து காலை 9.35 இற்கு யாழ்ப்பாணத்தையும், கொழும்பு கோட்டைக்கு பிற்பகல் 06.32 இற்கும் சென்றடையவுள்ளது.
ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரம் சேவையில் ஈடுபடக்கூடிய கடுகதிப் புகையிரதம், யாழ்ப்பாணத்திலிருந்து காலை 08.20 இற்கு பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 04.25 இற்கு கொழும்பு கோட்டையை சென்றடையவுள்ளது.
இதுதவிர தலைமன்னாரிலிருந்து புறப்படும் புகையிரதம் காலை 07.30 இற்கு பயணத்தை ஆரம்பித்து, காலை 10.50 இற்கு அநுராதபுரத்தையும், பிற்பகல் 04.05 இற்கு கொழும்பு கோட்டைக்கு சென்றடையவுள்ளது.

இந்தோனிஷிய தலைநகரில் தாக்குதல்

indonesiaஇந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேராவது கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் பதினான்குக்கும் அதிகமான இஸ்லாமிய தாக்குதலாளிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இலக்குவைக்கப்பட்ட இடங்களில் ஐநா கட்டிடம் ஒன்றும், திரையரங்கம் ஒன்றும், ஒரு ஸ்டார்பக்ஸ் சிற்றுண்டி கடையும் அடங்குகின்றன.
துப்பாக்கிதாரிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின் சூத்திரதாரியின் பெயரையும் அவர்கள் அறிவித்துள்ளனர். இஸ்லாமிய அரசுக்குள் தனது அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள பஹ்ருண் நயிம் என்ற நபரே இதனை திட்டமிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கறுப்பு உடையில் வந்த நபர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். தாமே இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு குழு கூறியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே, அங்கு வெளிநாட்டு இலக்குகள் தாக்கப்படலாம் என்று எச்சரித்து வந்த பாதுகாப்புத்துறையினர், நகரின் பாதுகாப்பை அதிகரித்திருந்தனர்.

துருக்கியில் காவல்துறை தலைமையகத்தில் கார் குண்டு வெடிப்பு; 5 பேர் பலி

turkeyதென்கிழக்கு துருக்கியில் காவல்துறை தலைமையகத்தில் கார் குண்டு ஒன்று வெடித்ததில் ஐந்து பேர் பலியாகினர். 39 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒரு குழந்தையும் பெண்ணும்கூட இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். தியார்பகீர் மாகாணத்தில் உள்ள சினார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான நிவாரணப் பணிகள் தற்போது நடந்துவருகின்றன.
பிகேகே எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தீவிரவாதிகளே இந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் என அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுவரை எந்தக் குழுவும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கு உதவிகள்

vaddu valpar0வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த பெண்தலமைத்துவக் குடும்பங்களின் 130 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

அதேநேரம் மேலும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த தாய் தந்தையரை இழந்த 92 பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. Read more

மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு முக்கியமானது எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன்

sam magiஇலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு முக்கியமானது என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு ஏற்படுத்துவது தொடர்பில், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட யோசனை பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். Read more

ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும். – வீரமணி

ramathasஈழத் தமிழர்களான ஆதிக்குடிகளை அன்னியப்படுத்தாமல் அவர்களின் பண்பாடு, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் தமிழர்களின், இஸ்லாமியர்களின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன தலைமையில், அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. Read more