jjjjjjjjjjjjjjjj-3யாழ். புன்னாலைக்கட்டுவன் பிரதேச மக்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று புதுவருட தினமான 01.01.2017 அன்றிரவு திரு. கெங்காதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதிலே புன்னாலைக்கட்டுவன் கிராமமக்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றிருந்தார்கள். புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள் விரிவாக உரை நிகழ்த்தினார். அவர் தனதுரையில், இன்று இருக்கக்கூடிய அரசியல் அமைப்பு மாற்றம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய பிரச்சினைகள், மற்றும் அவைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது, கூட்டமைப்பின் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் என்பன குறித்து எடுத்துக் கூறினார். மேலும் கூட்டமைப்புக்குள் இருக்கும் கட்சிகள் தேர்தலுக்கு தனித்தனியே வேட்பாளர்களை தெரிவுசெய்வதை நிறுத்த வேண்டும். தனித்தனியாக வேட்பாளர்களைத் தேடுவதானது கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தி கூட்டமைப்பின் ஒற்றுமையையும் குழப்பிவிடும். ஆகவே நாம் எல்லோரும் ஒன்றாக நிற்க வேண்டும். கூட்டமைப்பிற்குள் உள்ள ஒரு கட்சி தமக்கு வேட்பாளர்களை தெரிவுசெய்வது நிச்சயமாக எங்களுக்கு தெரிந்த விடயம். அதையெல்லாம் நிறுத்தவேண்டும்.

அந்த கட்சியின் தலைமைக்கு இது சம்பந்தமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். ஆகவே நாம் ஒற்மையாகவே இருப்போம். ஓன்றுமையை குலைத்தால் அது தமிழ் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள், இதற்கு பதிலளித்த தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், அரசியலமைப்பு மாற்றம் கொண்டுவருவது மிகவும் கஸ்டமான விடயமாக இருக்கின்றது.

எங்களுடைய தீர்வு விடயத்திலே எதையுமே செய்துவிடக் கூடாதென்பதில், சிங்கள கட்சிகள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆயினும் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒரு தெளிவின்மை இருந்தாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள 16 அங்கத்தவர்களும் தலைவர் சம்பந்தன் அவர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகளை ஆதரித்தே நிற்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

jjjjjjjjjjjjjjjj-1 jjjjjjjjjjjjjjjj-2