Posted by plotenewseditor on 22 January 2017
Posted in செய்திகள்
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் “Youth Got Talent – 2016” மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில், பூவரசன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் பூவரசு இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளையர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவுபெற்ற மைதான சுற்றுவேலி, கடினபந்து துடுப்பாட்ட ஆடுகள நிர்மாணம் என்பவற்றின் திறப்பு விழா பூவரசன்குளம் மகா வித்தியாலய அதிபர் தலைமையில் பூவரசு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாணசபை உறுப்பினர் திரு செ.மயூரன் அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு வினோ நோகராதலிங்கம், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), ஜனாதிபதியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு வாசலை, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன் மற்றும் Read more