sfdfdfdதகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர், வெகுசன ஊடக மற்றும் நாடாளுமன்ற சீர்த்திருத்த அமைச்சிடம் தகவல் கோரி, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விண்ணப்பித்திருந்தார்.

தகவல் கோரப்பட்டு 14 நாட்களுக்குள் அதற்காக பதில் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், ரஞ்சன் ராமநாயக்க கோரிய தகவலுக்கு நான்கு நாட்களில் பெற்றுக்கொடுக்க அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ரஞ்சனின் கோரிய தகவலுக்கு இன்றைய தினம் பதில் பற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமையை உத்தியோகப்பூர்வமாக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அலரி மாளிகையில் இன்று நடைபெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.