Header image alt text

X11யுத்தம் முடிந்து 7 வருடங்கள் கடந்த நிலையிலும் மக்களின் காணிகள் வழங்கப்படாது தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்புக்களில் இருந்துவரும் நிலையில் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை தமக்கே வழங்கக்கோரி இன்றுடன் 13ஆவது நாளாக தமது காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விமானப்படை முகாமிற்கு முன்னால் தொடர்ச்சியாக நில மீட்பிற்கான சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்தில் இன்று வட்டு இந்து வாலிபர் சங்க உறுப்பினர்களும் பங்கு பற்றியதுடன். தமிழ் புலம்பெயர் அமைப்பான லண்டனைச் சேர்ந்த எதிர்காலத்திற்கான பாதை என்ற அமைப்பு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக கேப்பாபுலவு மக்களுடன் அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 200 மதிய உணவு பொதிகளையும் சுமார் ரூபா 60,775 பெறுமதியான உலர் உணவுப்பொருட்களான அரிசி 200கிலோ பால்மா 30 பெட்டி சீனி 100கிலோ ரின்மீன் 25 தேயிலை 10கிலோ சோயா 10கிலோ பருப்பு 25கிலோ பிஸ்கட் 10 பெட்டி நுளம்புத்திரி 10பெட்டி கற்பூரம் 10 பெட்டி என்பவற்றையும் வழங்கியுள்ளது. Read more

cvbcvbதமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைககள் நிறுவக மாணவர்கள் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று நண்பகல் வாய்களை கறுப்புத்துணியால் கட்டி பாரிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிறுவகத்தின் வகுப்புகளிலிருந்து வெளியேறிய பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் வீதியில் இறங்கி கல்லூரியின் நுழைவாயிலை மறித்து மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சியே பதில் சொல்.! எமது காணிகள் எமக்கு வேண்டும்.! எமக்கு நீதி தேவை.! எனும் வாசகங்கள் உட்பட பல கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

dead.bodyயாழ். சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மரணித்த, பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

57 வயதுடைய சிறிகலா எனும் பெண்னே இவ்வாhறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அயலவர்கள் மூலம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். குறித்த பெண் அவ் வீட்டில் கணவருடன் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

sfdffdஇலங்கை ஆசிரியர் சங்கத்தினர், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியான போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 9.30 மணியளவில், செம்மணி வீதியில் அமைந்துள்ள வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் அலுவலகத்துக்கு முன்பாக, ஆசிரியர் சங்கதினர் இந்த தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். “

வடமாகாண கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகள் விசாரிக்கப்படவேண்டும், பணித்தடை வழங்கப்பட்ட 3 ஆசிரியர்களை மீள இணைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும், செயலாளரை தாக்கியதாக கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சரின் செயலகம் பதிலளிக்க வேண்டும், முறையான இடமாற்றதினை நடைமுறைப்படுத்த வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

DSC06185முல்லைத்தீவு கருவேலன்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த குழந்தைகள் கும்மாளம் என்ற பெயரில் விளையாட்டுப் போட்டி நிகழ்வொன்று நேற்று (2017.02.11) சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா அவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் கௌரவ விருந்தினர்களாக வைத்தியக்கலாநிதி நிரேகா, விவசாய போதனாசிரியர் சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். Read more

fhghநல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை என மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இன்றுமுற்பகல் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய வியாழேந்திரன் பா.உ., அவர்கள், ஜனவரி 31ஆம் திகதியிலிருந்து தெருவோரத்திலே குளிரிலும் வெயிலிலும் வேதனையுடன் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தை முல்லைத்தீவு மக்கள் நடாத்தி வருகின்றனர். கேப்பாப்பிலவு மக்கள் இறுதி யுத்தத்திலே 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை சென்று மிகப் பெரிய பாதிப்புக்களையும் இழப்புக்களையும் சந்தித்து இப்பொழுது பெருந்துயரோடு வீதியோரத்தில் வந்து தமது துன்பதுயரத்துக்கு முடிவு வேண்டி தவம் கிடக்கின்றார்கள். செட்டிக்குளம் முகாம் தொடக்கம் இன்றுவரை அவர்கள் வேதனைகளைச் சுமந்துகொண்டுதான் காலங் கழிக்கின்றார்கள். Read more

P1410547யாழ். கொக்குவில் இராமகிருஸ்ண வித்தியாசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வு கடந்த 07.02.2017 செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா அவர்களும், கௌரவ விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். விருந்தினர்கள் கௌரவிப்பினைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று நிகழ்வுகள் ஆரம்பமாகின. இறுதியாக போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ, மாணவியர்க்கு பரிசில்களை வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். Read more

fdசொந்த நிலங்கள் மீண்டும் கிடைக்கும் வரைக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று பன்னிரண்டாவது நாளாக தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவில் அதிகளவான பனி, பகலில் அதிக வெயில் என காலநிலையின் தாக்கத்திற்கு மத்தியிலும் அந்த மக்கள் தமது போராட்டத்தில் உறுதியாகவுள்ளனர். யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களை கடந்தபோதும் சொந்த விவசாய நிலங்கள் இல்லாது இருப்பது அவர்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read more

sfdஅமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இலங்கையின் வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான நிபுணராகப் பணியாற்றும் ஜோன் ஹில்ஸ் என்ற அதிகாரி கடந்தவாரம் இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார்.

இந்தப் பயணத்தின்போது, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகத்தில் கடற்படை ஆலோசகராக உள்ள லெப்.கொமாண்டர் பிரையன் பேஜுடன் இணைந்து வடபகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். Read more

sigiriaதம்புள்ளயில் உள்ள சிகிரியாவை பார்வையிடச் செல்பவர்களுக்கு வசதியாக லிப்ட் மற்றும் எலக்ரிக் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக, அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

தொல்பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிகிரியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, லிப்ட் மற்றும் எலக்ரிக் மோட்டார் வாகனங்கள் அவசியம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சிகிரியா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.