Header image alt text

P1420172வட்டுக்கோட்டை வட்டு இந்துக் கல்லூரியில் நடைபெற்று முடிந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ, மாணவியர்க்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 17.02.2017 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலையின் அதிபர் தனபாலசிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்க்கான பரிசில்களை வழங்கிவைத்தார். இப் பாடசாலையின் கட்டிட புனருத்தாரண வேலைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 150,000.00 ரூபாவினை ஒதுக்கீடு செய்திருந்தார். Read more

dgfgdவிமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்புலவு மக்கள் நடத்தும் தொடர் போராட்டம் இன்று 20ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், தமது நிலைகளை அங்கிருந்து விலக்கிக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லையென விமானப்படை கூறியுள்ளது.

கேப்பாப்புலவில் உள்ள விமானப்படை நிலைகளை விலக்கிக் கொள்வது குறித்த எந்த அறிவுறுத்தலும் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வரவில்லை என்றும், எனினும், இப் பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்படு வதாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more

erereமுல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்கள் நடத்திவரும் நில மீட்புப் போராட்டத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றது.

போராட்டம் நடைபெறும் இடத்துக்கு முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் வருகை தந்து சிறுவர்களைப் பரிசோதனை செய்து மருந்துகளையும் வழங்கி வைத்தனர். கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். Read more

fhghghகேப்பாப்பிலவு விமானப்படை முகாமுக்கு முன்பாக வீமானப்படையினரால் போடப்பட்டிருந்த அறிவித்தல் பலகையில், “விமானப்படையின் காணி, அதனை மீறி உட்சென்றால் சுடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்த நிலையில்,

நேற்றையதினம் இரவோடிரவாக அந்த அறிவித்தல் பலகை மாற்றப்பட்டு, “இது விமானப்படையின் காணி,தேவையில்லாமல் உட் செல்லத் தடை” என்று எழுதப்பட்டு புதிய அறிவித்தல் பலகையொன்று போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hgfhggமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உணவகம் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது. அத்தோடு அருகில் இருந்த துவிச்சக்கர வண்டி உதிரிப்பாக கடை ஒன்றும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த தீப்பரவல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தீயை ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு பரவாது வர்த்தகர்கள் கட்டுப்படுத்தியுள்ளனர். குறித்த உணவகத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட எதிர்மறை மின் உராய்வு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.  இந்த தீ விபத்தின் காரணமாக இரு வர்த்தக நிலையங்களிலும் 40 லட்சத்துக்கு மேற்பட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அவ்விடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

sfdகளுத்துறை கட்டுகுறுந்த கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கிய 36 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதில் 26 பேர் பேருவளை மருத்துவமனையிலும் மேலும் 6 பேர் களுத்துறை நாகொட மருத்துவனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பேருவளையிலிருந்து கட்டுகுருந்த பகுதிக்கு மதவழிப்பாட்டிற்காக படகொன்றில் சென்றிகொண்டிருந்த போதே இவர்கள் விபத்தில் சிக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

P1420267கடந்த வருடம் நடைபெற்ற இளைஞர் கழக அணிகளுக்கிடையிலான தேசிய மட்டப் பேட்டிகளில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும நிகழ்வு யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலி லக்ஸ்மி திருமண மண்டபத்தில் நேற்று 17.02.2017 மாலை நடைபெற்றது.

கடந்த வருடம் சம்பியனான பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி, கிரிக்கெட், வலைப்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டியில் மூன்றாம் இடத்தையும், கயிறு இழுத்தல் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் அணியினர், ஆண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் சம்பியனான ஆண்கள் அணி, கூடைப்பந்தாட்டத் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஆண்கள் அணி ஆகியன இதன்போது கௌரவிக்கப்பட்டன. ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற செந்தூரன், ஆண்களுக்கான தட்டு எறிதலில் வெண்கலப்பதக்கம் வென்ற பிரகாஸ்ராஜ் மற்றும் தேசியமட்ட கலாசாரப் போட்டியில் வெற்றிபெற்றோரும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

கௌரவிப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பிருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் கணேஸ்வரன் வேலாயுதம் ஆகியோரும், கௌரவ விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், சுகிர்தன், பரஞ்சோதி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

P1420159யாழ். கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி வித்தியாலயத்தின் அதிபர் கி.தர்மசீலன் அவர்களின் தலைமையில் 16.02.2017 வியாழக்கிழமை நடைபெற்றது.

மேற்படி நிகழ்வின் பிரதம விருந்திரனராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கோ.பாரதராஜமூர்த்தி (பிரதிக் கல்விப் பணிப்பாளர், யாழ் வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக முருகையா சுரேந்திரராஜா (பழைய மாணவர்) அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இறுதியில் வெற்றியீட்டிய மாணவ, மாணவியர்க்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்களுடன், பெருந்தொகையான பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Read more

sfயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் மற்றும் வழக்குரைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறல் விடயத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவுஸ்ரேலிய பணிப்பாளர் எலைனி பியர்சன்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்னமும் இயல்பு நிலைமை முழுமையாக ஏற்படவில்லை என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியிருந்த நிலையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

SFDFகேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியான போராட்டத்தினை நடத்தி வருகின்ற நிலையில், காணி விடுவிப்பு தொடர்பான எந்தவிதமான கரிசனையும் கொள்ளாத விமானப்படையினர், படைமுகாமுக்குள் உள்ள கட்டடங்களின் புனருத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விமானப்படையின் விடுமுறை மண்டபத்துக்கான புனருத்தான பணிகளையே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பிலவுக்குடியிருப்பில் உள்ள மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து வைத்துள்ள விமானப்படையினர் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தினையும் தமது ஆக்கிரமிப்புக்குள் வைத்துள்ளனர். Read more