Posted by plotenewseditor on 10 April 2017
Posted in செய்திகள்
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கட்டடத் திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணியளவில் முன்பள்ளி மண்டபத்தில் முன்பள்ளியின் அதிபர் திருமதி மீரா குணசீலன் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவர் க.சந்திரகுலசிங்கம், கே.தர்மபாலன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு வலயம்), எஸ்.இராஜேஸ்வரன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், வவுனியா வடக்கு வலயம்), கலாநிதி தமிழ்மணி அகளங்கன் (தலைவர், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்), எஸ்.அருள்வேல்நாயகி (முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர்), வி.யோகநாதன் (கிராம சேவையாளர்), இலங்கேஸ்வரன் (பொலிஸ் அதிகாரி), ஐ.விக்னபவானந்தன் (ஜே.பி –செயலாளர் சிவன் கோயில்)ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
Read more