யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் இன்று அறிவித்ததையடுத்து, இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கமைய, அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. Read more






