vaddu.Gவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்த்தை சேர்ந்த யுத்தத்தால் பாதிக்கபட்ட 5 குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் யாழ் மாவட்டத்தில் வறுமைக்கோட்டிக்கு உட்பட்ட 4 குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்குமாக 9 புதிய துவிசக்கரவண்டிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. கனடா நாட்டை சேர்ந்த ரவீந்திரன் முதல்வன் அவர்கள் இதற்கான நிதி அணுசரனையினை வழங்கியிருந்தார்.யாழ் மாவட்ட மாணவர்களக்கான துவிசக்கரவண்டிகள் கையழிப்பு நிகழ்வு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலத்திலும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மாணவர்களக்கான துவிசக்கரவண்டி கையளிக்கும் நிகழ்வு தேவிபுரம் இனிய வாழ்வு இல்லத்திலும் நடை பெற்றது
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குற்பட்ட 2 மாணவர்களுக்கும் கரைச்சி பிரதேச செயலகத்திற்குற்பட்ட ஒரு மாணவிக்கும் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தலா ஒரு மாணவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்டம் வலிமேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நான்கு மாணவர்களுக்கு இவ் 9 புதிய துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இவ் மாணவர்களின் எதிர்கால கல்வியில் அக்கறை கொண்டு மனிதபிமான உள்ளத்துடன் இவ் நற் காரியத்தினை செய்த திரு.ரவீந்திரன் முதல்வன் அவர்களுக்கு மாணவர்கள் சார்பாகவும் எமது சங்கத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்வதுடன் இவரும் இவராது குடும்பமும் சீரும் சிறப்புடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.

மேலும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கதினால் இற்றை வரைக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் புலம் பெயர் உறவுகள் புலம்பெயர் இந்து மத சார் அமைப்புக்கள் மற்றும் வட்டுக்கோட்டை வாழ் மக்கள் ஆகியவற்றின் நிதி அனுசரனையுடன் வன்னி மற்றும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 1000 க்கு மேற்ப்பட்ட துவிசக்கரவண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

vaddu.A vaddu.B vaddu.C vaddu.D vaddu.E vaddu.F vaddu.G vaddu.H