மாலைத்தீவு பாராளுமன்றம் அந்நாட்டு இராணுவத்தினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாலைத்தீவு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவதை தடுக்கும் வகையில் மாலைத்தீவு ஜனாதிபதி யமீன் அப்துல் கயூமின் பணிப்புரைக்கு அமைவாக இராணுவத்தினரால் பாராளுமன்றம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஆயுதம் தாங்கிய மாலைத்தீவு இராணுவத்தினரால் பாராளுமன்ற நுழைவாயில்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதாக பிரதான எதிர்கட்சியான மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தினுள் பிரவேசிப்பது வலுக்கட்டாயமாக தடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதி யமீனின் இந்த நடவடிக்கையானது, சட்ட விரோதமானதும், அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அறிக்கையொன்றின் மூலம் எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.