Posted by plotenewseditor on 26 August 2017
Posted in செய்திகள்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில், நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
குப்பைக்கு தீ வைத்தபோது அதில் இருந்த மர்மபொருள் வெடித்ததிலேயே இவ்விருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரையும் பளை வைத்தியசாலைக்கு கொணடு சென்ற போது, அங்கு நோயாளர் காவு வண்டி இல்லாததன் காரணமாக, மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவின் வாகனத்தில் ஏற்றி யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.