ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் ஒழுங்கமைப்பில் நெளுக்குளம் காத்தான் கோட்ட அமனா கழகத்தின் மாணவர்களுக்கு இன்று (05.08.2017) கழக மண்டபத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞரணியின் வவுனியா மாவட்ட செயலாளர் ஸ்ரீகரன் கேசவன்(இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்)அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இவ் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) இளைஞரணி செயலாளர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. Read more