Header image alt text

sfdfsஇலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டினை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

வடமேல் அபிவிருத்தி, கலாசார விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன மற்றும் தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ ஆகியோர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று தெரிவித்துள்ளார். Read more

ertrtrயாழ்ப்பாணம் கோப்பாயில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இன்று தெரிவித்தார். Read more

sdfsdfdfdயாழ்ப்பாணத்தில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் படகு சேவைகளை வழங்கி வருகின்ற படகு உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழியில், படகுச் சேவைகளை மேற்கொள்வதற்கு சில தனியார் படகுகள் தயாராகி வருவதற்கு எதிராகவே அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

pujithaநாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் சிவில் பாதுகாப்பு குழுவினருடன் நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். Read more

DSC07227லண்டனில் வசிக்கும் செல்வி கிஷ்னவி அவர்களின் பிறந்த தினத்தையொட்டி தோழர் மணியின் வேண்டுகோளுக்கிணங்க முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டதோடு, தேனீர் வேளை சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது. Read more

swaminathanசுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

சுவிஸ் தேசிய தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்தின் தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் சுமார் 50 ஆயிரம் இலங்கையர்கள் வரையில் வசிக்கின்றனர். அவர்கள் நாடு திரும்பி நாட்டின் அபிவிருத்திக்கான தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

raviஇலங்கைக்கான ரஷ்ய மற்றும் அமெரிக்க தூதுவர்கள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நேற்று சந்தித்துள்ளனர். வெளிவிவகார அமைச்சின் தகவல்படி, இலங்கைக்கும் குறித்த நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுவடையச் செய்வது தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு ரஷ்யா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று இருநாட்டு தூதுவர்களும் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.