Header image alt text

land givingகிளிநொச்சி மாவட்டத்தில், இராணுவத்தினர் வசமிருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 38 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்களை இராணுவத்தினர், கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்தனர்.

கரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை இனங்காணப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின்போது கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர்களும் உடனிருந்தனர்.

thilak marapanaபணிப்பொறுப்புகள் அமைச்சர் திலக் மாரப்பன, புதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்தே, அந்த வெற்றிடத்துக்கு அமைச்சர் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில், கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது, அமைச்சர் திலக் மாரப்பனவைத் தயாராக இருக்குமாறு, ஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

rohana hettiyarachchiஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். Read more

sdsமக்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் படிவங்களை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Read more

electronic Identity cardபுதிய இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. 2ம் கட்டமாக ஏற்கனவே தேசிய அடையாள அட்டையைக் கொண்டுள்ளவர்களுக்கு புதிதாக இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

gfhf“எங்களிடம், இனவாதமோ, மதவாதமோ இருக்கக்கூடாது. அதற்கு அப்பால் எங்களிடம் மனித நேயம் இருக்க வேண்டும். அதுதான் சரியான நல்லுறவை ஏற்படுத்தும். இனவாதத்தையும் மதவாதத்தையும் இந்த நாட்டிலே அரசியல் செய்வதற்கு வளர்ப்போமானால், இந்த நாட்டை ஆக்கபூர்வமான நாடாகக் கட்டியெழுப்ப முடியாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். Read more

newzealandநியுசிலாந்தில் அகதி அந்தஸ்து பெற்றுக் கொள்ளும் இலங்கையர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டு 23பேரும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21பேரும் இலங்கையில் இருந்து சென்று அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 5க்கும் குறைவானவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு நியுசிலாந்தில் அதிக அகதி அந்தஸ்த்தைப் பெற்றுக் கொண்டவர்கள் சீனர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

sdfsdfsdவவுனியா தாண்டிகுளம் தொடருந்துக் கடவையை பாதுகாப்பான தொடருந்துக் கடவை ஆக்கக் கோரியும் நேற்றுமாலை குறித்த கடவையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை கண்டித்தும் இன்றுகாலை தொடருந்தை மறித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி தொடருந்து காலை 8.20 மணிக்கு தாண்டிக்குளம் கடவையில் சிவப்பு கொடி காண்பித்து மறிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. பொலிஸாரின் தலையீட்டையடுத்து 10 நிமிடங்களின் பின் தொடருந்து பயணத்தைத் தொடர போராட்டக்காரர்கள் அனுமதித்துள்ளனர். 

shranthiமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களுடைய புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ ஆகிய இருவரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு, இன்று அழைக்கப்பட்டுள்ளனர். Read more