Header image alt text

case filedஅரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளே இந்தப் பத்து மனுக்களையும் தாக்கல் செய்யவுள்ளனவென, தகவல் வெளியாகியுள்ளது.

சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதனை, அரசமைப்பின் 20ஆவது திருத்தமாக, நாடாளுமன்றத்தின் சமர்ப்பிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அந்த திருத்தம், உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுமாயின், அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளனவென தெரியவந்துள்ளது. Read more

a6யாழ் இந்துக்கல்லூரி அவுஸ்ரேலியாவின் விக்ரோரியா மாநில கிளை பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் புத்தகபைகள் மற்றும் காலணிகள் என்பன அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக தமது வாழ்க்கைத் துணைகளை இழந்துள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களைக் கொண்ட தூணுக்காய் மாந்தைக் கிழக்கு ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களில் இருந்து முன்னூரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 105 மாணவர்களுக்கு சுமார் ரூபா 422128 பெறுமதியான புத்தகப் பைகள், காலணிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more

yosithaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

வாகனம் ஒன்றின் நிறத்தை மாற்றியமை தொடர்பிலான விசாரணையில் வாக்குமூலம் பெறுவதற்காகவே தான் அழைக்கப்பட்டிருப்பதாக யோஷித ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்றைய தினம் ஷிராந்தி ராஜபக்ஷ விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த வேளை அங்கு வருகை தந்திருந்த யோஷித ராஜபக்ஷ இதனைக் கூறியிருந்தார். Read more

deadயாழ். சாவகச்சேரி கைதடி கிழக்குப் பகுதியில் இன்று காலை வாந்தி எடுத்த குடும்பஸ்தர் மயங்கி வீழந்து உயிரிழந்துள்ளார். கைதடி கிழக்கைச் சேர்ந்த விஜயானந்தன் விஜயரூபன் (வயது-37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவ் உயிரிழப்புத் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதனை பார்வையிட்ட நீதிவான், பிரதேச திடீர் சாவு விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் மூலம் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.