Header image alt text

vm2017நடந்து முடிந்த 28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புளொட் அமைப்பின் புலம்பெயர்ந்த உறுப்பினர்கள், தெரிவுசெய்யப்பட்ட 09 கழக உறுப்பினர்களின் குடும்பங்களிற்கு, அவர்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வாழ்வாதார உதவிகளை வழங்க முன்வந்திருந்தனர். அதன் முதற்கட்டமாக கடந்த 16.07.2017 அன்று வவுனியாவில் வைத்து 05 குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. Read more

ddddddதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகம், கோவில்குளம் இந்துக் கல்லூரியின் 2007 உயர்தர பழைய மாணவர்களுடன்,

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சர்வதேச கிளைகள் என்பவற்றின் ஒன்றிணைந்த அனுசரணையுடன் கடின பந்து துடுப்பாட்ட அணிக்கான இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான முழுமையான விளையாட்டு உபகரணங்கள் 04.08.2017 கோவில்குளம் இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வைத்து புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் கல்லூரி முதல்வர் திரு த.பூலோகசிங்கம் மற்றும் விளையாட்டு பொறுப்பாசிரியர் திரு என்.சுந்தராங்கன் ஆகியோரிடம் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வைத்து வழங்கப்பட்டது.
Read more

bavanதிருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கட்கு,

மாவட்ட செயலகம், முல்லைத்தீவு

04.08.2017

 

கனம் அம்மணி,

முல்லைத்தீவு பிரதேசத்தில் சுருக்கு வலை மற்றும் டைனமெட் பாவித்து மீன்பிடி தொழிலை மேற்கொள்ளுவதாக முறைப்பாடுகளும் தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் கரைவலைப்பாடுகளில் உழவு இயந்திரத்தினை பாவிப்பதும் தெளிவாக அறியக்கூடியதாகவும் உள்ளது. Read more

IMG_5807வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று (04.08.2017) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் முதல்வர் திரு த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சிறப்பு அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். கௌரவ அதிதிகளாக செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன், Read more

26 (4)நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவியை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் அதிகாரியின் மனைவியான கெ.ஜீ.பி குமுதுனி முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதுடன், 05 ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸ் சேவையிலிருந்து விலகியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொருளாதார பிரச்சினை காரணமாக தான் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதாக அவர் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த பின் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார்.

pujithaயாழ்ப்பாணம் பிரதேசத்தின் சிவில் பாதுகாப்பு முறையை பலப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். Read more

rtyytகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற விபத்தில் தனியார் சொகுசு பஸ் சாரதி உட்பட ஆறுபேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் ஒன்று கடைத் தொகுதியையும், மின்சார கம்பங்களையும் உடைத்துக்கொண்டு கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more

australiaஅவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறச்சென்ற 15 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது. அவுஸ்திரேலியாவின் விசேட விமானத்தின் மூலம் குறித்த 15 பேரும் இன்றுகாலை 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். Read more