Header image alt text

sfdfdfdfயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது வன்னி பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டு தனியான பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கீழ் பிரயோக கணிதம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் நடத்திச் செல்லப்பட்ட வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் பம்பைமடுவில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த, நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறியுள்ளார். Read more

eastern universityகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் தவிர்ந்த அனைத்துப் பீடங்களையும் இன்றுமுதல் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக விடுதியிலுள்ள சகல மாணவர்களும், நாளை பகல் 12 மணிக்கு முன்பு தங்களுடைய உடமைகளுடன் வீடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பல்கலைக்கழகத்தின் பேரவை, திருகோணமலை வளாகம் தவிர்ந்த வந்தாறுமூலை வளாகம் மற்றும் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் ஆகியவற்றை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

ddsds“2018ஆம் ஆண்டு, இலங்கைக் கடற்பரப்புக்குள் வருகை தரவுள்ள நோர்வேயின் புதிய ஆராய்ச்சிக் கப்பலான பிரிட்டோவ் நன்சன், இலங்கைக் கடற்பரப்பில் கடல் வளங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளது” என, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நோர்வேத் தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த, தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவுக்குள் இக்கப்பலின் வருகையைத் திட்டமிட்டு இற்றைப்படுத்தும் நிகழ்வை அங்கிகரிக்கும் நிகழ்வு, நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில், கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீரவும் கலந்துகொண்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, Read more

vehiclesசில வாகனங்களில் உற்கத்திவரியானது இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சற்று முன்னர் தெரிவித்தார்.

அதன்படி 150 சிசி இற்கு குறைந்த மோட்டார் சைக்கிள், சிறிய ரக வாகனம் மற்றும் பாரவூர்திகளுக்கு அறவிடப்பட்டு வந்த உற்பத்தி வரியானது 90 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். Read more

jjjjjjjjjjjjjjjjஐ.நா. சபைக்கான பாலின சமத்துவத்துவத்திற்கான ஆலோசகரும் அவுஸ்திரேலியாவின் பாலின சமத்துவத்திற்கான வழக்கறிஞருமான எலிசபத் பிரொட்ரிக் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாலின சமத்துவத்தை இலங்கையில் ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அவர், வர்த்தகத் தலைவர்கள் உள்ளிட்ட பெண் தொழிலாளர்களை சந்தித்து பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். அதேசமயத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும் சந்தித்து கலந்துரையாடி, இலங்கையில் பாலின சமத்துவம் தொடர்பாக பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். Read more