Header image alt text

k.bawanமுல்லைத்தீவு மாவட்டம், கரைதுறைப்பற்று செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் இன்று (28.08.2017) நடைபெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில், வட மாகாண விவசாய, நீர்ப்பாசன, கமநல, மீன்பிடி துறைகளின் அமைச்சர் க.சிவநேசன் கலந்து கொண்டிருந்தார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இலங்கையில் 03வது கட்டமாக வடக்கின் 04 மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு அதிலும் முல்லை மாவட்டத்தின் 06வதும் இறுதியுமான நடமாடும் சேவையாக இன்றைய நிகழ்வு நடைபெற்றது. Read more

wererயாழ்ப்பாணம் மண்டைத்தீவு கடற்பகுதியில் வள்ளம் கவிழ்ந்ததில் பலியான 6 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பகல் 1.30 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மண்டைத்தீவிற்கு சென்ற 14 பேரில் 7 பேர் சிறுதீவிற்கு வள்ளத்தில் சென்றுள்ளனர்.இதன்போது வள்ளம் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் தப்பிச்சென்று கடற்படையினருக்கு தகவல் வழங்கியதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க குறிப்பிட்டார். உரும்பிராய், சண்டிலிப்பாய் மற்றும் கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

vvvvTHIGUVI சர்வதேச கல்விச்சேவை நிறுவனத்தின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஜெட்விங்க் விடுதியில் நேற்றையதினம் (27.08.2017)நடைபெற்றது. இந்நிகழ்வினை THIGUVI இயக்குநர்களுள் ஒருவரான செல்வரட்ணம் குலசேகரம் (குணபாலன்) தொகுத்து வழங்கியதோடு THIGUVI கல்விச்சேவை மையத்தின் இயக்குநர்களுள் ஒருவரான விஜயசேகரன் இரட்ணசபாபதி அவர்களும் உடனிருந்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், வட மாகாண அமைச்சர் க.சிவநேசன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் மலேசியாவிலிருந்து (American Hospitality Academy-AHC) நிறுவனத்தின் திரு குமரேசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

defence seminarபூகோள மற்றும் வலயப் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும், கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு, இன்றும் நாளையும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகின்றது.

இதில் சுமார் 700 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதன்போது, பூகோள வன்முறை பயங்கரவாதம், பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்புச் செயற்பாடுகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் பணிக்குழு சிவில் உறவுகள், மாநில உறவுகள் மற்றும் அதன் பயங்கரவாத வன்முறைகள், கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்புகள், பிராந்திய அமைப்புக்களின் பங்களிப்புகள், ஐக்கிய நாடுகள் மூலோபாயம், ஆகிய தலைப்புக்களில் கருத்தரங்குகள் இடம்பெற ஏற்பாடாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

votes

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், யாவும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் தள்ளிபோவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் தெரிவிக்கின்றது.

டிசெம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற, கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைகளை கவனத்தில் கொண்டே, உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில், அவ்வாணைக்குழு கலந்தாலோசித்து வருகின்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலான சட்டமூலம், நாடாளுமன்றத்தில் கடந்த வெளளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. Read more

post protestகிழக்கு மாகாண ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவையை வழங்க கோரி இன்றுகாலை 10 மணியளவில் மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

104 பேருக்கு சுமார் 87 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் 4000 ரூபாய் முதல் 283,500 ரூபாய் வரை ஒருவருக்கு வழங்க வேண்டியுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளனர். Read more