Header image alt text

saddsaஉலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமாக கருதப்படும் ஏ-380 விமானம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவுள்ளது.

குறித்த விமானத்தில் கண்காணிப்பு செயற்பாடுகள் ஏனைய பயணிகள் விமான சேவைகளுக்கு ஒத்தாற் போல முன்னெடுக்கபடவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுதளம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் நவீன விமானங்கள் தரையிறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

sdffsf2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி வள்ளிபுனம், செஞ்சோலை வளாகத்தில் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட சிறார்களான மாணவர்களின் 11ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் திருவுருவப்படத்திற்கு பல்கலைக்கழக மாணவர்களால் மலர்கள் வைத்து மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை செஞ்சோலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் 11ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செஞ்சோலை வளாகத்தில் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது.

dsdபயணிகள் போக்குவரத்து பஸ்கள் தனியான வழித்தடத்தில் பயணிப்பதற்கான நடைமுறை நாளை முதல் கொழும்பில் அமுல்படுத்தப்படவுள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடைமுறையை பின்பற்றவுள்ளதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனூடாக பொது போக்குவரத்து துறை மேலும் வலுப்படுத்தப்படும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். காலை 6 மணி தொடக்கம் 9 மணி வரையான காலப்பகுதியில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். Read more

dfgfdகதிர்காமத்திலிருந்து, நுவரெலியா வலப்பனை வழியாக மிஹிந்தலை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா மினி பஸ் ஒன்று வலப்பனை நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

மிஹிந்தலை பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு கதிர்காமத்திற்கு சென்று மீண்டும் மிஹிந்தலைக்கு செல்லும் வழியிலேயே குறித்த பஸ் நேற்று இரவு 8 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more