Header image alt text

sadasdமட்டக்களப்பு, சித்தாண்டியில் காணாமல்போன 62 பேரின், 27ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ச்சியான சுற்றிவனைப்புகள் நடந்துகொண்டிருந்த வேளையில் வாழைச்சேனை, பேத்தாளை, முறாவோடை, கிண்ணையடி, கிரான், சந்திவெளி, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் அபாயத்தை எதிர்நோக்கினர். Read more

police ...குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரினால் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஆர்.எஸ்.ஆர் நாககமுல்ல உள்ளிட்ட 08 பேருக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான எச். ஆர். ரவி பீரிஸ், எம்.ஏ.ஈ. மகேந்திர, பி.சி. டி சில்வா, ஜே.ஐ.டி.ஏ. குணதிலக, டி.ஜே. பலிஹக்கார, எஸ்.பி. கலப்பத்தி, டி.எம்.டி.ஜே பிரியலால் ஆகியோருக்கே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

indo lanka fishingஇந்திய கடற்றொழில் அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு இலங்கைக்கு வருகை தந்து 42 இந்திய இழுவை படகுகளை பார்வையிட்டுள்ளனர்.

2015.03.06ம் திகதி இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட 42 இந்திய இழுவை படகுகளை இலங்கை அரசாங்கம் அண்மையில் விடுவித்திருந்தது. இந்த படகுகள் தற்போது இந்தியாவுக்கு கொண்டு செல்லக்கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காகவே மேற்படி 9பேர் கொண்ட குழு இலங்கை வருகை தந்திருந்தது. Read more