Posted by plotenewseditor on 27 August 2017
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 27 August 2017
Posted in செய்திகள்
தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்காவின் பதில் உதவி ராஜாங்க செயலாளர் மற்றும் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானுக்கான பதில் விசேட பிரதிநிதியாக செயற்படும் எலிஸ் வெல்ஸ் அம்மையார் அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது இலங்கையின் அரசியல், சிவில் மற்றும் பாதுகாப்பு தரப்புடன் முக்கிய சந்திப்புகளையும் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more
Posted by plotenewseditor on 27 August 2017
Posted in செய்திகள்
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பிரதேசத்தில் நேற்றையதினம் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளரும்,
வட மாகாண கால்நடை, விவசாய, நீர் வழங்கள், மீன்பிடி அமைச்சர் கௌரவ கந்தையா சிவநேசன் அவர்கள் கலந்துகொண்டு மக்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார். இதில் பெண்கள் அமைப்பு, கிராம சங்கம், மீனவர் சங்கம், கமக்காரர் சங்கம் பாடசாலை பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
Read more
Posted by plotenewseditor on 27 August 2017
Posted in செய்திகள்
சட்டவிரோதமான முறையில் தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்களுக்கு அந்த நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
கடந்த ஜூலை 10ஆம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தது. Read more
Posted by plotenewseditor on 27 August 2017
Posted in செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் 53 அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதி நடமாடும் சேவை நேற்று நடாத்தப்பட்டது. அமைச்சர் திலக் மாரப்பன வஜேர விஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள்,
வடமாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் க.சிவநேசன், பிரதி அவைத்தலைவர், மாகாணசபை உறுப்பினரகள், அரச அதிபர், பிரதேச செயலகர்கள், படைத்துறை அலுவலகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது காணி பத்திரம், சுயஉதவி நிதி என்பன வழங்கப்பட்டது. ஏனைய அரச நிறுவன தேவைகளுக்காக மக்கள் இதனை பயன்படுத்தியிருந்தனர். Read more
Posted by plotenewseditor on 27 August 2017
Posted in செய்திகள்
தேர்தல் ஆணைக்குழு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்கள் நாளுக்கு நாள் பிற்போடப்படுவது தொடர்பாகவே இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய உள்ளிட்ட மூவரின் கையொப்பங்களுடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 27 August 2017
Posted in செய்திகள்
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இன்றுகாலை 8.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர் மீது, உழவு இயந்திரத்தில் வந்த ஒருவர் வாளால் வெட்டி தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் 53 வயது மதிக்கத்தக்க காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தை காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Posted by plotenewseditor on 27 August 2017
Posted in செய்திகள்
அமெரிக்காவில் வீசிய ஹார்வி சூறாவளியில் அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அங்குள்ள இலங்கைக்கான தூதரகத்தை தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் பிரந்தியத்தில் நேற்றைய தினம் 110 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசியுள்ளது. இந்த நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் அங்கிருக்கும் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 27 August 2017
Posted in செய்திகள்
இந்தியாவிடம் இருந்து மேலும் சில பாதுகாப்புக் கப்பல்களை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ட்ரெவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் கடற்பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ட்ரெவிஸ் சின்னையா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Posted by plotenewseditor on 27 August 2017
Posted in செய்திகள்
இந்த வருடத்தின் வாக்காளர் பட்டியலின் திருத்தங்களுக்கான காலம் அடுத்த மாதம் 6 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம் எம் மொகமட் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் கிராம சேவகரிடம் அது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என மேலதிக ஆணையாளர் எம் எம் மொகமட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.