Header image alt text

gdfdகிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்கின்ற 8,203 சிறுவர்களில், தாயையும் தந்தையும் இழந்து 31 சிறுவர்கள் உள்ளனரென, பிரதேச செயலகப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தந்தையை மட்டும் இழந்த சிறுவர்கள் 325 பேரும், தாயை மட்டும் இழந்த சிறுவர்கள் 40 பேரும், தந்தையைப் பிரிந்து வாழும் சிறுவர்கள் 13 பேரும், தாயைப் பிரிந்து வாழும் சிறுவர்கள் 12 பேரும், மாற்று வலுவுள்ள சிறுவர்கள் 65 பேரும், மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் 03 பேரும், சிறுவர்கள் இல்லங்களில் 96 சிறுவர்களும், சீர்திருத்தப் பாடசாலைகளில் 13 சிறுவர்களும் உள்ளனர் எனவும், பிரதேச செயலகப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

maithriபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற எவர் கனவு கண்டாலும் அதற்காக தனது ஆசிர்வாதமும் அங்கீகாரமும் அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஹிங்குராக்கொட வலய கல்வி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

kabir hasimஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடுமென ஐக்கியக் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

இதேவேளை, எந்த அரசியல் கட்சியாவது எம்முடன் இணைய விரும்பின் அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு நாம் தயார். மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு திறமையானவர்களை தெரிவு செய்வதற்கு இம் மாதம் விண்ணம் கோரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

errrவவுனியா தெற்கிலுப்பைக்குளம் மற்றும் மாமடுசந்தியை இணைக்கும் ஒளவையார் வீதியானது கடந்த 30 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வீதி நேற்று கிராம மக்களின் முயற்சியால் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த வீதியை புனரமைக்க வவுனியா பிரதேசசெயலம் 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கியுள்ள நிலையில், வவுனியா நகரசபையினரின் அனுமதியுடனும் மக்களின் பங்களிப்புடனும் குறித்த வீதி திறக்கப்பட்டுள்ளது. Read more