வவுனியாவில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் சார்பான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் நேற்று (17.08.2017) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞரணியின் செயலாளர் திரு சு.காண்டீபன் தலைமையில் வவுனியா பாலமோட்டை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்டு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் வாழ்வாதார உதவி லண்டனில் வசிக்கும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞரணி உறுப்பினர் திரு எ.முரளிதரனின் ஒழுங்கமைப்பில் அவரின் தந்தை அமரர் திரு.சுப்பிரமணியம் எதிர்வீரசிங்கம் ஐயா அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.
Read more