முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 32ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு அமரர் வி.தர்மலிங்கம் நினைவுக்குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 02.09.2017 சனிக்கிழமை காலை 7மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் நடைபெறவுள்ளது.
நவாலியூர் திரு. க.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி என்பன இடம்பெறவுள்ளதுடன், சிறப்பு அஞ்சலி உரையினை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் மற்றும் வைத்தியக்கலாநிதி அமிர்தலிங்கம் பகீரதன் (ரவி) ஆகியோர் ஆற்றவுள்ளனர். நன்றியுரையினை அமரர் வி. தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றுவார். இதனைத் தொடர்ந்து மதியம் 12மணிக்கு ஏழாலை கண்ணகை அம்மன் ஆலய மண்டபத்தில் அன்னதான நிகழ்வும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. Read more