Header image alt text

கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் வீட்டின் அருகில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீட்டிற்கு அருகில் மலசல கூடம் அமைப்பதற்கு புதிதாக அகழப்பட்ட குழியில் குறித்த வெடிக்காத நிலையில் குண்டு அவதானிக்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more

கிண்ணியா கெங்கை மணல்ஆறு பிரதேசத்தில் காவல்துறையின் சுற்றிவளைப்புக்கு அஞ்சி மஹாவலி ஆற்றில் பாய்ந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா – பைசல் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய ரனீஸ் எனும் இளைஞர் என தெரியவந்துள்ளது.

மகாவலி ஆற்றில் நேற்று சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களைப் காவல்துறையினர் சுற்றிவளைக்க முற்பட்ட வேளையில் தப்பிச்செல்ல முயன்ற ஐந்து நபர்களில் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்தார். Read more

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்படும் காலகிரமத்திற்கு அமைய 28 ஆம் திகதி இந்த பெறுபேறு வெளியிப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 30 இன் கீழ் 1 மற்றும் 34ல் கீழ் 1 ஆகிய இரண்டு பிரேரணைகளின் பரிந்துரைகளும் முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான பூகோள பருவகால மீளாய்வு அறிக்கை நேற்றையதினம் 37வது மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதன்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய பிரித்தானியாவின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார். Read more

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ஆரியதாஸ குரே கூறியுள்ளார். தான் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

தனது பதவி நீக்கத்திற்கு காரணம் தனது வயதெல்லையே என்று பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஆரியதாஸ குரே கூறியுள்ளார். இது தொடர்பான கடிதம் இன்று தனக்கு கிடைத்ததாக ஆரியதாஸ குரே குறிப்பிட்டுள்ளார்.

26 பாதுகாப்பு படையினரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 3 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இருந்து வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் பெற்றுக்கொடுத்த உத்தரவொன்றிற்கு அமைய குறித்த வழக்கு இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. முதலில் வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த வழக்கு சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய அனுராதபுரம் மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டிருந்தது. Read more

கத்தி முனையில் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவமொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிபத்கொடயிலுள்ள தனியார் வங்கியொன்றிலேயே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாதோர் கத்தியைக் காட்டி குறித்த தனியார் வங்கியில் கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். Read more

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ சட்டத்தரணியூடாக நீதிமன்றில் ஆஜரானதையடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெற்றுக் கொள்ள கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணை ஒன்றிற்காக விமல் வீரவன்ஸ ஆஜராகாத காரணத்தினால் நேற்று அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியா, பண்டாரிகுளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கழுத்து வெட்டப்பட்டு காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

36 வயதுடைய சிவநாதன் தவரூபன் எனும் நபரே உயிரிழந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்று பொலிஸாரிடம் கூறியுள்ள உயிரிழந்தவரின் தாய், தனது மகன் சில நாட்களாக ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். Read more

கொழும்பு மாநகர சபையின் பிரச்சினைகளை தீர்த்து பலமான கொழும்பை நாம் உருவாக்குவோம் என கொழும்பு மாநகரசபையின் முதல் பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், Read more