Header image alt text

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார நிர்வாக நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றது.

இன்றைய தினத்தில் இருந்து ஒரு மாத காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளுக்கு அமைவாக அரசியல் கட்சிகளுக்கு சபைகளை அமைக்க முடியும். Read more

மகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில், அவர்களை தேடி அலைந்து திரியும் வயோதிப சகோதரிகளின் நிலைமையை கண்டு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் கண்ணீர் சிந்தி இருந்தனர்.

யாழுக்கு நேற்று (19) விஜயம் செய்த ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வயோதிப சகோதரிகள் இருவரும் கதறி அழுதமை அங்கிருந்தவர்களை நெகிழ செய்திருந்தது. Read more

காணாமல் போனோர் அலுவலகம்மீது, புலம்பெயர்ந்த அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் குறித்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அலுவலகம் புலிகளின் சார்பில் இயங்கவிருப்பதாகவும், வடக்கு கிழக்குக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பூகோள இலங்கையர்கள் பேரவை என்ற புலம்பெயர்ந்த அமைப்பு குற்றம் சுமத்தி இருந்தது. Read more

தமிழக மீனவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை போன்ற மனித உரிமை மீறல்களை இலங்கை மேற்கொள்வதாகவும், இந்தவிடயத்தை இந்திய அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மதுரை மேல்நீதிமன்றக் கிளை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தது. Read more

இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை இன்று திறந்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல் நிலை அனைவரும் அறிந்ததே. நாட்டில் அன்பு செலுத்துகின்ற அரசியல்வாதிகள் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்பது ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. Read more

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக, இலங்கையின் உயர்மட்டக் குழு சுவிற்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவுக்கு இன்று பயணமாகிறது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகின்றார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புக்கூறல் மூலம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புகள் குறித்தும் இதன்போது தெளிவுபடுத்தப்பட உள்ளது. Read more

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், நேற்று ஜப்பானுக்குச் சென்றதை அடுத்து, கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வேலுசாமி இராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சராக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நாடு திரும்பும் வரை, கல்வி அமைச்சராக வேலுசாமி இராதாகிருஷ்ணன் செயற்படுவாரென, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். Read more

கொழும்பு – ஆமர் வீதியில் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்ற தம்பதியினர் சென்ற வாகனம்மீது இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதில் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படுகாயமைந்துள்ள மனைவி கொழும்பு தேசிய மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். Read more

மட்டக்களப்பு -வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள குறிஞ்சாமுனையில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் சடலங்கள் இன்று அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததின் பேரில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் குறிஞ்சாமுனையைச் சேர்ந்த 29 வயதான நீலவண்ணன் லோகநாயகி மற்றும் 36 வயதான கந்தசாமி வேதநாயகம் ஆகியோரை சடலங்களை மீட்டுள்ளனர். ஏற்கெனவே திருமணமான இவர்கள் இருவரும் இரண்டாந்தாரமாக ஒருவரையொருவர் திருமணம் செய்திருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. Read more

விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையர் ஷைத் அல் ராட் {ஹசைன் இலங்கைக்கு வருவதை எதிர்த்து பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக குறித்த இருவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குருந்துவத்த பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more