தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியும், இனவெறிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தவருமான வின்னி மண்டேலா தனது 81 வயதில் காலமானதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலாக போராடிய நெல்சன் மண்டேலா, தனது 27 வருட சிறைவாசத்தின் பின்னர் வெளியே வந்தபோது அவருடன் இணைந்து வின்னி பேராட்டங்களில் ஈடுபட்டார். வின்னியும் நெல்சன் மண்டேலாவும் கைகோர்த்து நடந்த புகைப்படம் அந்த காலகட்டத்தில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக கருதப்பட்டது. நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிகப்பட்டிருந்த வின்னி உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தின் பேச்சாளர், விக்டர் டிலாமினி கூறியுள்ளார்.