Header image alt text

இலங்கை விமான சேவையில், புதிதாக சேவையில் ஈடுபடுத்தும் பொருட்டு இன்று (30), புதிய விமானம் ஒன்று சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

சர்வமத வழிபாடுகளை தொடர்ந்து, எயார் பஸ் நிறுவனத்தின், ஜேர்மன் ஹெம்பர்க் தொழிற்சாலையினால் உற்பத்தி செய்யப்பட்ட, A-321neo ரக விமானமே இவ்வாறு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் காற்று எதிர்ப்பைக் குறைத்து பறக்கக்கூடிய வகையில் புதிய நிர்மாணிப்பதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாம் ஏலவே இரண்டு கடிதங்கள் மூலம் உரிய தரப்புக்கு அறிவித்திருப்பதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். இந்த செயலணியின் 48 பிரதிநிதிகளில் 2 பேர் மாத்திரமே வடக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், ஏனையோர் மத்திய அரசாங்கத்தையும் பாதுகாப்பு தரப்பையுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என தெரிவித்த வடக்கு முதல்வர், இதனால் தாம் இந்த செயலணியை தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மத ரீதியான சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்கு ஆவனசெய்யப்படும் என்று, அரசாங்கம் அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசம், அமெரிக்க அதிகாரிகளுடனான மாநாடு ஒன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் தொடர்ந்தும் மத ரீதியான அமைதியின்மை நிலவுவதாக அண்மைக்காலத்தில் அறிக்கைகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், இதனை தணித்து, அனைத்து மதங்களும் தங்களது சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். Read more

11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படை புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் இருவரும் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதனுடன் தொடர்புடைய வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள், ஆறு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை வட-கிழக்கு கிராம அலுவலர் அடையாளம் தெரியாத குழு ஒன்றினால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாள் மற்றும் கம்பிகளுடன் 4 உந்துருளிகளில் அவரது அலுவலகத்துக்குப் பிரவேசித்த எட்டு பேர் கொண்ட குழு ஒன்று அவரை அச்சுறுத்தியதுடன், அவரது முச்சரக்கரவண்டி, மடிகணினி, கைப்பேசி உள்ளிட்ட உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளது. Read more

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யு.எஸ்.சி.ஜி ஷேரமன்’, இலங்கை கடற்படைக்கு அடுத்தமாதம் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது.

1967 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், 50 ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில், கடந்த மார்ச் மாதம், அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. 378 அடி (115 மீற்றர்) நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பல் தற்போது ஹவாய் தீவிலுள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் தரித்து நிற்கிறது. Read more

இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட இருந்த புகையிரத வேலை நிறுத்த போராட்டத்தை இரத்து செய்வதற்கு புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சர்கள் சிலருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்ட உடன்பாட்டிற்கு அமைய இந்த போராட்டத்தை இரத்து செய்ய தீர்மானித்ததாக புகையிரத இயந்திர ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார். Read more

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11பேர் காயங்களுக்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் கொழும்பு பேருந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more

மன்னார் விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 43 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற மனித புதைக்குழி அகழ்வின் போது, மனதை கனப்படுத்தும் விதமாக தாய் ஒருவரும் அவருக்கு அருகே பச்சிளம் குழந்தை ஒன்றின் மனித எச்சமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இரு மனித எலும்புக்கூடுகள் தொடர்பாகவும் எந்த வித துல்லியமான கருத்துக்களும் தங்களால் கூற முடியாது எனவும் முழுமையான பரிசோதனைகளின் பின்னரே கருத்துக்கள் தெரிவிக்க முடியும் எனவும் மேற்படி அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். Read more

மஹர சிறைச்சாலைக்கு முன்னால் பிரதேசவாசிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் சிறைச்சாலையில் அனைத்து வாசல்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல முற்பட்ட பேருந்து மீண்டும் சிறைச்சாலைக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 100 வருடங்கள் பழமையான வீதியை மூடிவிட்டு அதற்கு மாற்று வழி ஒன்றை ஏற்படுத்தி தராத காரணத்தால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் உரிய அதிகாரிகள் அதற்கான தீர்வு ஒன்றை வழங்குமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.