தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டதன் பின்னர், கடந்த மூன்று வருடங்களில், பொலிஸாருக்கு எதிராக, 89 சதவீதமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, கடந்த 2015.10.10 ஆம் திகதி முதல் 2018.05.30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், 4,437 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் இந்த முறைப்பாடுகளில் 3,963 முறைப்பாடுகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதில் பொதுமக்களை அலட்சியப்படுத்தியமை தொடர்பிலான முறைப்பாடுகளே அதிகம் பதிவாகியுள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற பொலிஸாருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மீதமுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள ஆணைக்குழு, பொலிஸ் அறிக்கையின் தாமதம் காரணமாக விசாரணைகள் தாமதமாகுவதாகவும் தெரிவித்துள்ளது.