Header image alt text

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பில், இன்றுமாலை வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என்றும், 2.23 லட்சம் பேர் 1,500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலம் முழுதும் 1,568 நிவாரண முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் 52,856 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2,23,000 பேர் தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். Read more

வவுனியாவில் கடந்த ஒருவார காலமாக அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களுடன், இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஈரப்பெரியகுளம், அலகல்ல வித்தியாலயத்தில் கடந்த ஒருவாரகாலமாக இடம்பெற்றுவரும் இலவச மருத்துவ முகாம் நாளைய தினத்துடன் முடிவடைகின்றது. Read more

அழிவடையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு எதிர்வரும் வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இம்மாநாடு 2019ம் ஆண்டு மே 23ம் திகதிமுதல் ஜூன் 03ம் திகதிவரை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன், 183 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சுற்று சூழல் அமைப்புகள், உலகளாவிய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட நாலாயிரத்தை அண்மித்தோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். Read more

வெள்ளப்பெருக்கு காரணமாக நாளைய தினம் வரை மூடப்பட்டிருந்த கேரளா கொச்சின் விமான நிலையத்தை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மூடுவதற்கு குறித்த விமான நிலைய அதிகரிகள் தீர்மானித்துள்ளனர்.

இவ்வாறு கொச்சினுக்கான விமான சேவைகள் தாமதமடைந்துள்ளதால் ஸ்ரீலங்கன் விமான சேவை, பல மாற்று நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. Read more

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை விதித்த பொருளாதார தடைகளை மீறியமைக்காக சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த காலங்களில் வடகொரியாவானது உலக நாடுகளின் எதிர்ப்புக்களைத் தாண்டியும் ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளுக்கு மத்தியிலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தது. இந்த நடவடிக்கை காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வடகொரியா மீது பலத்த பொருளாதார தடைகளை விதித்தது. Read more

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 11.15 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றனர். சுமார் 03 மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க, இராஜதந்திர விஜயமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இத்தாலி செல்லவுள்ளார்.

இதன் காரணமாக, இம் மாதம் 20 ஆம் திகதி முதல், 28 ஆம் திகதி வரை, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பதில் ஆளுநராக கடமையாற்றவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் போக்குவரத்துக்கு விரைவில் புதிய ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுமென, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்னும் ஓரிரு மாதங்களில் புதிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும், அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

அம்பாறை பொத்துவில் கனகநகர் பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்படும் நிலமீட்பு போராட்டம் இன்று 4வது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 180 குடும்பங்கள் தற்காலிக முகாம்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

யுத்தம் நிறைவடைந்தபின் முகாம்களில் இருந்து தமது சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல முயற்சிக்கப்பட்ட போதும், பல சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சிகள் முடக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

லிபியா முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2011 ஆம் ஆண்டு அரபு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடபகுதி நாடுகள் ஆகியவற்றில் திடீர் புரட்சி ஏற்பட்டது. இதில் சில நாடுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சில நாடுகள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன. லிபியா நாட்டில் நீண்ட காலமாக முகமது கடாபி ஆட்சியில் இருந்து வந்தார். அங்கும் புரட்சி ஏற்பட்டது. Read more