Header image alt text

ஜனநாயக நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைவதால் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்றுகாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான 30 ஆவது சரத்தின் 21 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி பரந்தன் சந்தியில் கார் ஒன்றும் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு உள்ளான பேருந்து அவ் இடத்தில் இருந்து சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீதியில் நின்ற இராணுவ வீரர் ஒருவரும், வேறு ஒரு பேருந்தின் நடத்துனரும் விபத்தில் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உடுப்புக்குளம் பகுதியில் வைத்து, நேற்று இரவு 7.30 மணியளவில், தனியார் பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு – தங்காலை வழிப் போக்குவரத்து பஸ் மீதே,இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, பஸ் சாரதி காயங்களுக்கு இலக்கான நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more

மட்டக்களப்பு – புனானை ஆற்றில் குளிக்கச்சென்ற பெண் ஒருவர் முதலைக்கு இரையாகி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – வாழைச்சேனை, புனானை கிழக்கு பகுதியில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பல வருடங்களாக நீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

தற்போது நிலவும் வறட்சியை அடுத்து, கிணறுகளிலுள்ள நீர் வற்றியுள்ளமையால், குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்காக புனானை ஆற்றுக்கே மக்கள் செல்கின்றனர். புனானை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 74 வயதான பொன்னன் மாரியாயி நேற்று முற்பகல் 11 மணியளவில் குளிப்பதற்காக புனானை ஆற்றுக்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் ஆற்றிலிருந்த முதலை இவரை நீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. Read more

முல்லைத்தீவு மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியில் இன்று கப்ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியின் கல்விளானுக்கும் கனேசபுரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்றுபிற்பகல் வெள்ளாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் மல்லாவியிலிருந்து வெள்ளாங்குளம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கப்ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. Read more

யாழ் தாவடிப் பகுதியில் நேற்றையதினம் வாள் வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவினர் வீட்டின் உள்ளே ஏனையில் படுத்துறங்கிய குழந்தையினை படமெடுத்துச் சென்றதனால் தாயார் பெரும் பதற்றமடைந்தார்.

தாவடி , சுதுமலை, இணுவில் பகுதிகளில் நேற்று மாலை 5 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 12 பேர் கொண்ட வாள் வெட்டுக்குழுவினர் 3 வீடுகளில் புகுந்து தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போதே மேற்படி சம்பவமும் இடம்பெற்றது. Read more