Header image alt text

புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுகாலை யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் அமைந்துள்ள சிறுப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு விஜயம் செய்து நிலைமைகளை கண்டறிந்தார்.

இந்த விஜயத்தின்போது பாடசாலையின் அதிபர் திரு. த.யுகேஸ் மற்றும் ஆசிரியைகளுடன் கலந்துரையாடல் ஒன்றினையும் அவர் மேற்கொண்டிருந்தார். இதன்போது பாடசாலையின் அத்தியாவசியத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அதிபரும், ஆசிரியைகளும் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்கள். Read more

இலங்கை அரசாங்கத்தின் செலவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை சம்பந்தமான தகவல்களை வெளியிடாமையால் விசாரணைகளை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் இயன் பைஸ்லி, சுயாதீன உறுப்பினராக பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இந்த விஜயத்தின் மூலம் பிரித்தானிய பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்டமை உறுதியானதால் 30 நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. Read more

இந்து சமுத்திரத்தில் பொருளாதாரம் மற்றும் நிதி கேந்திர நிலையமாக மாறும் இலங்கையின் எதிர்பார்ப்புகளுக்கு, ஆளுங்க்சியான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அந்நாட்டு மக்கள் பூரண ஆதரவை தருவார்களென சீன கம்யூனிஸ் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் க்வா யேஜு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கால் ஆரம்பிக்கப்பட்ட பட்டையும் பாதையும்” வேலைத்திட்டத்தின் இதற்கான வாய்ப்புகள் கிடைப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். Read more

வட மாகாணத்தினை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பில் முழுமையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக புலம்பெயர் வாழ் இலங்கை பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.

புலம் பெயர் வாழ் இலங்கை பிரஜைகளுக்கும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே குறித்த உறுதி மொழியினை புலம் பெயர் வாழ் இலங்கை பிரஜைகள் வழங்கியுள்ளனர். Read more

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று காலை 8 மணிமுதல் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக, வைத்திய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக, கொழும்பு தேசியை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.

வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பால், குறிப்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலைகளினதும் வெளிநோயாளர் பிரிவு, சிகிச்சை பிரிவு அனைத்தும் முடங்கியதால், நோயாளர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். Read more

தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டதன் பின்னர், கடந்த மூன்று வருடங்களில், பொலிஸாருக்கு எதிராக, 89 சதவீதமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைவாக, கடந்த 2015.10.10 ஆம் திகதி முதல் 2018.05.30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், 4,437 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் இந்த முறைப்பாடுகளில் 3,963 முறைப்பாடுகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் மேற்கொள்ளப்படுமாயின், உடனடியாக அறிவிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், 24 மணிநேரமும் முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு, 0112123700 என்ற அவசர இலக்கத்தையும் ஆணைக்குழு அறிமுகம் செய்துள்ளது.

நாட்டில் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், தொடர்ந்து அதனை பாவனைக்கு உட்படுத்தி வருவதன் காரணமாக, தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை சுற்றிவளைக்கும் செயற்பாட்டை பொலிஸாருக்கு ஒப்படைக்க, மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் விசாரணைப் பிரிவு மற்றும் நுகர்வோர் பாவனையாளர் அதிகார சபை ஆகியன இணைந்து இதுவரை சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. Read more

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மின்சார துண்டிப்பு நடவடிக்கையை கண்டித்து மன்னாரில் இன்று காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக சீரான மின்சாரம் வழங்கப்படாத நிலையில் அடிக்கடி மின் தடங்கள் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக தினமும் சில மணி நேரம் அல்லது நாள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவது வழமையாகி உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Read more

வவுனியாவில் கடத்தப்பட்ட இரு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15, 16 வயது சிறுமிகள் இருவர் நேற்று பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது காணாமல் போயிருந்தனர்.

காணாமல்போன சிறுமிகள் இருவரும் வவுனியா, சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் கொண்டு சென்று தடுத்து வைத்திருந்த நிலையில் இரு சிறுமிகளும் அங்கிருந்து வெளியேறி அயலவர்களின் உதவியுடன் தப்பித்துள்ளனர். அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். Read more