Header image alt text

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் எதிர்வரும் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு இந்தத் தினத்தை அனுஷ்டிப்பதற்காக விசேட வேலைத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

காணாமல் ஆக்கப்படுவதற்கு இடமளியோம் என்பது இம்முறை தொனிப்பொருளாகும். பலவந்தமாக ஆட்கள் கடத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்வைக் கண்டறிவதற்கான போராட்டத்தின் வெற்றியாக இது கருதப்படுகிறது. Read more

தனிப்பட்ட அரசியல் செல்வாக்கையும் பணத்தையும் மாத்திரமே தமிழ் பிரதிநிதிகள் எதிர்பார்த்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொள்ளாமையால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பது தொடர்பான ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. Read more

சபாநாயகரால் நியமிக்கப்படும் பிரதமர் தலைமையிலான குழு, தனது அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் கையளிக்குமானால் ஜனவரி மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளின் எல்லை நிர்ணய குழுவின் செயலாளர் மற்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன்ஸ்ரீ ரத்நாயக்க ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர். ஆயினும் குறித்த காலப்பகுதியில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் அதற்கான சட்ட திருத்தங்கள் நிறைவேற்றிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Read more

காலமான முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்திரா ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலான இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். மேலும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட உறவினர்களிடம் ஜனாதிபதி தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார். Read more

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதானது அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாதென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்க கூடாதென முக்கிய சில காரணங்களை சுட்டிக்காட்டி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடத்தில் கடிதம் மூலம் கோரியிருந்தார். Read more

‘செமட்ட செவண’ திட்டத்தின் கீழ் திருகோணமலை கிளிவெட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இவ்வீட்டுத்திட்டம் அமைந்துள்ள இடத்திற்கு முத்துமாரியம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் அமைக்கப்படும் 110 வது வீடமைப்பு திட்டமென்பதும் குறிப்பிடத்தக்கது. Read more

காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரரை காணவில்லை என, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்தளாயை சேர்ந்த பியந்த (வயது 25) என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீரர், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரே, காங்கேசன்துறை கடற்படை முகாமில் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் கடற்படை முகாமில் இருந்து ஆயுதங்கள் எதுவுமின்றி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். Read more

பொதுமன்னிப்பு காலப்பகுதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகள் 1,818 பேர் தாயகம் திரும்பவுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ள பிரஜைகள் நாடு திரும்புவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தினால் இம்மாதம் முதலாம் திகதி முதல் 3 மாத காலத்திற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, அந்நாட்டில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்குத் தயாராகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. Read more

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தியில் சுகாதார துறையினரால் பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் ஆளனி மற்றும் பௌதீக வளக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை முன்பு இருந்தது போல் அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிர்வாகத்திற்கு கீழ் கொண்டுவருமாறும் கோரிக்கை விடுத்து Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாமிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு இடம்பெறவுள்ள, இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் பங்கு கொள்ளுவதற்காகவே பிரதமர் அங்கு செல்கின்றார்.

எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில், பல நாடுகள் கலந்துகொள்கின்றன. குறிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிரிஸ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். Read more