Header image alt text

பத்திரிகை அறிக்கை

Posted by plotenewseditor on 21 August 2018
Posted in செய்திகள் 

பத்திரிகை அறிக்கை

அன்பார்ந்த தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும்!

புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வெகுஜன அமைப்பான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது ஆண்டுநாள் எதிர்வரும் 18.09.2018 ஆகும்.

ஆயுதப் போராட்டத்தில் ஏற்படக்கூடிய தேக்க நிலையை ஈடுகட்டும் வகையிலும், பரந்துபட்ட அளவில் எமது மக்களின் அனைத்து பிரிவினரையும் விடுதலைப் போராட்டத்தின்பால் அணிதிரட்டக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்ட வெகுஜன முன்னணியாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, இந்திய படைகளின் இருப்புக்கு மத்தியிலும், எமது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக, வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக மறைந்த செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பங்குபற்றலுடன் தனது முதலாவது வெகுஜன போராட்டத்தை நடாத்தியிருந்தது. Read more

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாளோடை கலைவாணி சனசமூக நிலையத்தால் நடாத்தப்படும் கலைவாணி முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா-2018 (19.08.2018) பிற்பகல் 2மணியளவில் சனசமூக நிலைய முன்றலில் சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. முத்து தவராசா தலைமையில் நடைபெற்றது.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு. இரத்தினசிங்கம் கெங்காதரன் அவர்களின் ஒழுங்கமைப்பின்கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், Read more

உயர்திரு. தில்லையம்பலம் கந்தையா கதிரேசு அவர்களின் சமய, சமூக கல்விப் பணிகளைப் பாராட்டி ஆணைக்கோட்டை இந்து சமய விருத்திச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு

ஆனைக்கோட்டை மூத்தநயினார் ஆலய இரட்ணசபாபதி திருமண மண்டபத்தில் (19.08.2018) பிற்பகல் 4மணியளவில் ஆனைக்கோட்டை இந்துசமய விருத்திச் சங்கத் தலைவர் திரு. ஏ.வீ.கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக இறைவணக்கத்தைத் தொடர்ந்து ஆசியுரையினை சிவசிறி க.கிருண்ணேஸ்வரக் குருக்கள் (பிரதமகுரு மூத்தநயினார் தேவஸ்தானம்) நிகழ்த்தினார். தொடர்ந்து தலைமையுரை இடம்பெற்றதையடுத்து நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் உயர்திரு. தில்லையம்பலம் கந்தையா கதிரேசு அவர்கள் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். Read more

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேர 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார்.

நேற்று இரவு 10.15 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து சந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் 126 என்ற விமானத்திலேயே அவரும், 19 பேர் அடங்கிய அவருடைய குழுவும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். Read more

சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் கண்காணிப்பு அமைச்சர் விஜேபால ஹெட்டியாரச்சி கூறினார்.

தெரிவு செய்யப்பட்ட சில சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார். வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் நேற்று குழப்பத்தை ஏற்படுத்தியதால் 08 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. Read more

பாரிய நிதி மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இது ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாரிய நிதி மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றத்தை அமைப்பதறங்கான சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. Read more

2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பதிவு பட்டியலில் இணைக்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட பெயர்ப் பட்டியல் காட்சிப்படத்தப்படுகின்றது.

அனைத்து கிராம சேவகர், பிரதேச செயலகம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் இந்த பெயர்ப்பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படுவதாக தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது. Read more

பசுபிக் தீவான நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிச் சிறார்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் ஒன்றியம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. குறித்த முகாமில் தடுப்பில் உள்ள 12 வயதான சிறுவன் ஒருவர், ஒருவாரகாலமாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் அமைந்துள்ள பாதணி விற்பனை நிலையமொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் குறித்த கடைக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து பம்பலபிட்டி சந்தியில் அமைந்துள்ள கடையொன்றிலேயே இடம்பெற்றுள்ளது. தீ வேகமாக பரவிய நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். Read more