Header image alt text

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்ரீசியா ஸ்கொட்லண்ட் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இன்று பகல் சிங்கப்பூரில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 348 என்ற விமானம் மூலம் அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். நான்கு நாள் விஜயமாக அவர் இலங்கை வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. 2016ம் ஆண்டு செயலளராக பதவியேற்றதன் பின் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரி ரொபேர்ட் ஹில்டன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more

இலங்கை பொலிஸாரினால் பொதுமக்களுக்கு வழங்கும் சேவையை மேலும்விரிவு படுத்துவதற்காக இலங்கை பொலிஸாருக்கு 600 ஜீப் வாகன வண்டிகளையும் பொலிஸ் அதிரடிப்படைக்கு 150 ஜீப் வாகனங்களையும் வழங்குவதற்காக இந்திய நிதி உதவியின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதற்காக அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம், சட்டம் மற்றும் அமைதி தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவரகள் சமர்த்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேசத்தின் அனைத்து கிராம உத்தியோகஸ்தர்களும் இன்று காலை தொடக்கம் துறைசார் செயற்பாடுகளில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

யாழில் செயற்படும் ‘ஆவா’ குழுவின் வன்முறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 29ம் திகதி யாழ்ப்பாணத்தில் வீடொன்றுடன் சேர்ந்து அமைந்துள்ள கிராம உத்தியோகஸ்தர் அலுவலகமொன்று தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இதன்போது குறித்த அலுவலகத்தில் இருந்து உபகரணங்களுக்கு பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் தொழில் பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று மன்னார் கவனயீர்ப்பு பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தில் ஏற்பாட்டில் இன்று முற்பகல், மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபர் கே.ஏ.மோகன்ராஸிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, வாழைச்சேனை சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு கோரி பிரதேச மக்கள் சிலர் இன்று கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு எதிராக பல்வேறு வசனங்கள் எழுதிய சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யினை கோரு­வ­தற்­கான உரித்து பொது எதி­ர­ணிக்கு இல்லை. அர­சாங்­கத்தில் அமைச்சர்­க­ளாக அங்கம் வகித்­துக்­கொண்டு அதே­ கட்­சியை சேர்ந்­த­வர்கள் உத்­தி­யோ­கப்­பூர்வ எதிர்க்­கட்­சி­யாக இருக்க முடி­யாது.

இதற்­கேற்­ற­வ­கை­யி­லேயே பொது எதி­ர­ணியின் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யை தமக்கு வழங்­க­வேண்­டு­மென்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் பொது எதி­ர­ணி­யினர் கோரி வரு­கின்­றனர். Read more

மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதன் மூலம் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2018 ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் நிறைவடையவிருந்த காலத்தை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையில் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. Read more

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்று இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.

நிபுணர்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புகள் இணைந்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளன. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறைமை, மேலதிக ஆசனங்களின் ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்களில் முக்கியமான பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்யபட்டிருக்கின்றன.

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருடைய பிணைக்காக முன்னின்ற அவரின் மனைவி மற்றும் அவரின் உறவுக்கார சகோதரியையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். Read more