Header image alt text

 (கே.குமணன்)-
சிங்கள அரசியல் தலைமைகள் மிகத் தெளிவான கொள்கையுடன் வடகிழக்கு தமிழ் மண்ணின் முழுமையாக குடிப்பரம்பலை மாற்றும் நேர்ககில் செயற்படுகின்றன என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று மகாவலி திட்டத்தினூடான நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், நாடு சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் சிங்கள அரசியல் தலைமைகள் மிகத் தெளிவான கொள்கையுடன் வட கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை, முழுமையாக குடிப்பரம்பலை மாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் அம்பாறையில் கல்ஓயா திட்டத்தில் ஆரம்பித்தது. Read more

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு  எதிர்வரும் 02.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00மணியளவில

யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் நவாலியூர் திரு. ககௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது. Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலாளர், அலிஸ்வெல்ஸுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்து சமுத்திர கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக, வியட்நாம் சென்றுள்ள இவரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பின்போது, இந்து-பசுபிக் பிராந்திய நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

14 பேரைக் கொண்ட இந்த குழு, கிழக்கு மாகாண கடற்படை கட்டளைத் தளபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கெப்டன் அசோக் ராவோவும் இணைந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி முறுகண்டியைச் சேர்ந்த 32வயதான கருப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனைகள் காணப்பட்டதைத் தொடர்ந்து அதுபற்றிய தேடுதல்கள் இடம்பெற்றநிலையில் அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் ஒரு பெண் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் என கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

தென் பகுதி மீனவர்களினால் தமது உடமைகளை இழந்த நாயாறு பகுதியைச் சேர்ந்த ஒன்பது தமிழ் மீனவ குடும்பங்களுக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மீன்பிடி வலைகளை இன்று வழங்கி வைத்தார்.

கடந்த 13ஆம் திகதி இரவு முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தென்பகுதி மீனவர்களுக்கும் நாயாறு மீனவர்களுக்கும் முறுகல் நிலை ஒன்று தோன்றியதை தொடர்ந்து நாயாறு பகுதியினை சேர்ந்த தமிழ் மீனவர்களின் எட்டு மீனவ வாடிகள் மற்றும் உடைமைகள் என்பன தீவைத்து அழிக்கப்பட்டன. Read more

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் இன்றுகாலை காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த தம்பிராசா குணராசா (வயது 47) என்பவர் மாட்டுத் பட்டியடிக்குச் சென்ற வேளையிலே காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளார். Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியுள்ளார். வியட்நாமின் ஹெனொய் நகரில் நேற்று மாலை ஆரம்பமான இந்து சமுத்திர மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கரமசிங்க,

பூகோளவியல் மாற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு வலய நாடுகளுக்கு முடியாமற்போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அதற்காக சிறந்த திட்டங்களை வகுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். Read more

கிளிநொச்சி – கரைச்சி பிரதேவ செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரவுன் ரோட் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்து, இன்றுகாலை 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதிக்குப் பின்புறமாக உள்ள குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்ற இருவர், வயல் கால்வாயிலிருந்த சடலத்தைக் கண்டுள்ளனர். Read more