Header image alt text

இலங்கை உட்பட இந்திய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த அமெரிக்கா முன்வந்துள்ளது. அமெரிக்காவிற்கான ராஜாங்க செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ இதனை தெரிவித்துள்ளார்.

ஆசியான் பிராந்திய மாநாட்டில் அவர் உரையாற்றுகையில், இதற்காக 30 கோடி அமெரிக்க டொலர்கள் நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பிராந்திய நாடுகளின் கடல் பாதுகாப்பு, இடர் மனிதாபிமான உதவி, பரஸ்பரம் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

மேற்கத்தேய நாடுகளில் பணியாற்றும், இலங்கை இராஜதந்திரிகள் பலருக்கு விரைவில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில அமைச்சர்களின் வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. குறித்த அதிகாரிகளின் நடத்தையால் இலங்கையின் புகழ் மழுங்கடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை மீள நாடு திரும்புமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீட கட்டிடத் தொகுதி, மாணவர் விடுதி மற்றும் ஊழியர் விடுதி என்பவற்றின் திறப்புவிழா நேற்று முற்பகல் 11.30அளவில் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,

5ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று கட்டிடங்களையும் திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து பொறியியற்பீட கட்டிடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் விசேட கூட்டமொன்றும் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், யுத்த காலத்தில் இப்பிரதேசத்தினை எங்களால் அபிவிருத்தி செய்ய முடியாமற் போயிருந்தது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற பிரேமதாஸ அவர்கள் 90ஆம் ஆண்டில் வவுனியாவில் இணைந்த பல்கலைக்கழகம் நிறுவினார். அதற்குப் பின்பு எம்மால் செய்யமுடியாமற் போயிருந்தது.
Read more

புளொட்டின் 29ஆவது வீரமக்கள் தினம் கடந்த ஜூலை 13ம் திகதிமுதல் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் யாழ். நீர்வேலியில் புளொட்டின் வலிகாம்ம் கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபை உறுப்பினர். இராசேந்திரம் செல்வராஜா (செல்வம்) அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆரம்பித்து நீர்வேலி மூத்த விநாயகர் (வாய்க்காத்தரவை பிள்ளையார்) கோவில் மற்றம் நீர்வேலி சந்தி பாலம் உள்ளிட்ட பிரதேசங்களில் சிரமதானமும் இடம்பெற்றது. Read more

மக்கள் முகம் கொடுக்கின்ற அடிப்படைய பிரச்சினைகள் தொடர்பில் தேசிய காவற்துறை ஆணைகுழுவின் கீழ் 7 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தேசிய காவற்துறை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. போதைப்பொருள், வீதி விதிமுறை மீறல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்டவையை தடுப்பது தொடர்பில் குறித்த காவற்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டம் நானாட்டன் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்ட 102ஆவது மாதிரிக் கிராமமான ´லூர்து நகர்´ கிராமம் வைபவ ரீதியாக இன்று காலை கையளிக்கப்பட்டது.

இன்றுகாலை 10.30 மணியளவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு ´லூர்து நகர்´ கிராமத்தை வைபவ ரீதியாக மக்களிடம் கையளித்தார். Read more

வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் 194 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தலைமையில் யாழ் பொது நூலகத்தில் இன்று மாலை இந்நிகழ்வு நடைபெற்றது.

தமக்கான நியமனங்களை வழங்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர். இந் நிலையில் பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கமையவே வட மாகாணத்திலுள்ள பட்டதாரிகளில் 194 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more

வவுனியாவில் கடத்தப்பட்ட இரண்டு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை வவுனியா நகரப்பகுதி ஒன்றைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயது மாணவிகள் பூந்தோட்டம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டிருந்தனர். கடத்தப்பட்ட இருவரையும் சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து அன்றைய தினம் மாலை தப்பித்ததுடன், அலரி விதை உட்கொண்டிருந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். Read more

வவுனியா வைரவப்புளியங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்று மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரிலிருந்து குருமன்காடு நோக்கி வைரவப்புளியங்குளம் வீதியூடாக பயணித்த கார் மீது குருமன்காட்டிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது. Read more

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய கவுன்சில் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளிற்கு எதிரான குறிப்பிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகளின் கீழ் ஐரோப்பிய ஓன்றியம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. Read more