Header image alt text

இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்து நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக தான் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பினை தான் பாராட்டுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றுவரும் வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் பிம்ஸ்டெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்திய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் இருந்து இன்று ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமாலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சில்லிக்கொடியாறு பாலத்திற்கு அருகில் இருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. Read more

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் தலைநகரான கத்மண்டு நோக்கி பயணமாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை மியன்மார் ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

‘சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி’ என்ற கருப்பொருளில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான வங்காள விரிகுடாவின் வாயில் என்ற பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகின்றது. Read more

பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் நேற்றையதினம் கொலைசெய்யபட்ட யுவதிக்கு நீதி கோரியும் நாளை கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மைக்காலமாக எமது பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும், பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும், Read more

சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக வடமாகாண பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்றுகாலை 9.00 மணியளவில் எதிர்ப்பு போராட்ட ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது. தாயாகப் போற்றப்படும் பெண்கள் இன்று கேவலமாக இழிவுபடுத்தப்படுகின்றார்கள். இவ்வாறு கேவலப்படுத்தி வருகின்ற பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தங்களுடைய நிர்வாணப்படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு வரும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே நிலவும் போதைப்பொருள் மற்றும் கையடக்க தொலைப்பேசி, மாலைநேர வகுப்புக்கள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும். Read more

இலங்கை அரசாங்கமும், ஐ.நா சபையும் வடகிழக்கு மகாணங்களை உள்ளடக்கிய எட்டு மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை விரைவில் வழங்குமாறு வலியுறுத்தி இன்றுகாலை திருக்கோவிலில் கவனயீர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்ற இந்த பேரணியானது, தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை முன்னெடுக்கப்பட்டது. Read more