Header image alt text

தமிழகத்தின் முன்னைநாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி இழப்பால் துயருற்றுள்ள கோடான கோடி தமிழ் மக்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்களுடன் நாமும் துயரினை பகிர்ந்துகொள்கிறோம்.

எமது விடுதலை போராட்டம் முளைவிட்ட காலம் தொட்டு எமக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய முக்கிய தலைவர்களில் கலைஞரும் ஒருவர். அன்று எம்மை வரவேற்று எமக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய குறிப்பாக தமிழகத்திற்கு ஏதிலிகளாக இடம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கல்வி மேம்பாட்டிற்கு நல்கிய உதவியை எம்மால் மறந்துவிட முடியாது. எமக்குள் ஏற்பட்ட சகோதர முரண்பாடுகளால் மனமுடைந்த கலைஞர் அவர்கள் இதனை கைவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுமாறு கோரியிருந்தவர். கலைஞரின் இவ் கருத்தை நாமும் கவனத்தில் கொண்டிருந்தால் ஈழத்தமிழினத்திற்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்காது என்பதும் வரலாறாகி சென்றுள்ளது.
Read more

இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கான 10 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவிற்கான தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக ஓஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நோர்வேக்கான புதிய தூதுவராக பேராசிரியர் அரூஷா குரேவும் பிரேஸிலுக்கான தூதுவராக எம்.எம். ஜஃபீரும் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகமும் தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, மாணவர் வன்முறை செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. Read more

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடலும் புதிய நிர்வாகத் தெரிவும் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக இடம்பெறுகின்றது.

குறித்த கலந்துரையாடலில் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத் தலைவர் கலந்துகொள்கின்றார். Read more