Header image alt text

கலைஞர் கருணாநிதி ஐந்து தடவைகள் முதலமைச்சராகவும் நீண்டகாலம் கட்சித் தலைவராகவும் பரிணமித்திருந்த போதிலும் அவரது தமிழ் பற்றும் அவரது தமிழ் அறிவும் தமிழ் மக்களால் என்றென்றும் மறக்க முடியாதவையாகும் என்று புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மறைந்த கலைஞர் கருணாநிதிக்கும் தமிழ் போராளிக்குழுக்களுக்கும் இடையிலான உறவு தொடர்பில் அவரிடம் கேட்டபோதே சித்தார்த்தன் இவ்வாறு விபரித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

போராட்டக்காலத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்குமிடையில் அரசியல் வேறுபாடுகள் காணப்பட்டன. இந்த வேறுபாடுகள் தமிழ் போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் பிரதிபலித்தமை உணரப்பட்டது. Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபை வெள்ளிக்கிழமை கூடிய போது இந்த நியமனம் அங்கீகரக்கப்பட்டுள்ளது. அவரது நியமனம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக இருக்கும் செய்யித் ராத் அல் ஹூஸைன் தனது இந்த மாத இறுதியில் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் அலுவலகம் மன்னாரில் இன்றுகாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வன்னி இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தரவேண்டும் அல்லது அதற்கான பொறுப்புகளை அரசு கூறவேண்டும் என்பதற்காக இன்று மன்னார் சாவற்காட்டுப் பகுதியில் குறித்த அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசானது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு தீர்வையும் தராமலும், அதற்கான பொறுப்பு கூறாமலும் காலத்தை இழுத்தடித்து, போராட்டத்தை மறக்கச் செய்யும் செயற்பாடுகளில் முனைப்புக் காட்டி வருகிறது என குற்றம் சாட்டடப்பட்டுள்ளது. Read more

புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று 4 வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

புகையிரத ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை முதல் குறித்த வேலை நிறுத்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. Read more