Header image alt text

அன்பார்ந்த தமிழ் மக்களே!

சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு சாத்தியமில்லாத பிரதேசங்களில்,  தமிழ் பேசும் காணி உரிமையாளர்களிடம், அவர்களின் சொந்த நிலங்களை, இராணுவத்திடமிருந்து பெற்று கையளிப்பதாக பரப்புரை செய்கின்ற நல்லாட்சி(?) அரசாங்கம், ஏனைய பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்தி, வனவளங்களின் பாதுகாப்பு,

பறவைகள் சரணாலயம் என்கின்ற செயற்திட்டங்களின் பேரால் அங்கு வாழ்ந்த, வாழுகின்ற தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும், வாழ்வாதாரத்துக்கான ஆதாரங்களாக உள்ள அடர்த்தியற்ற காட்டுப் பகுதிகளையும், களப்பு பிரதேசங்களையும், கடல் ஏரிகளையும், கரையோரங்களையும் சிங்கள மக்களின்  குடியேற்றப் பிரதேசங்களாக திட்டமிட்டு உருவாக்கி வருகிறது.  Read more

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு, எதிர்வரும் 10 ஆம் திகதி 3 நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டி.கே. ராஜபக்ஸ ஞாபகார்த்த நூதனசாலையை அமைப்பதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான வழக்கிற்காகவே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள 2ஆவது வழக்கு இதுவாகும்.

தமிழர்களின் பூர்வீக பூமியை கபளீகரம் செய்யும் மகாவலிக்கெதிரான போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் பூரண ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் புளொட் அமைப்பின் தலைவரும், யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரால் தமிழர்களின் பூர்வீக நிலங்களை கபளீகரம் செய்து குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டமிட்ட செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையின் போராட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. Read more

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த வருடத்துக்கான கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு, எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

8ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கருத்தரங்கு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. குறித்த கருத்தரங்கில் சுமார் 800 பேர் வரையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. Read more

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் சாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவில் இலங்கை தூதுவராலயத்திற்கான கட்டிடம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தியமையினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சாலிய விக்ரமசூரியவிற்கு பிணை வழங்கிய அவரின் மனைவி மற்றும் சகோதரிக்கும் பிடியாணை பிறப்பிக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றின் நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கரம்பன் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

´தஹம் பஹன´ அமைப்பின் தலைவர் சகோதரர் சார்ள்ஸ் தோமஸ் அனுசரணையில் இந்த வீடுகள் யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியினால் மதகுருமாரின் ஆசீர்வாதத்துடன் வீட்டு உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டன. Read more

தம்புளை – ஹபரணை பிரதான வீதியில், பிரதேச மக்கள் இன்று காலை முதல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன, மத பேதங்களின்றி, பொது மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுவந்த,

தம்புள்ளை-ஹபரணை பிரதான வீதியில் அமைந்துள்ள, பழமையான விநாயகர் ஆலயம், மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், அதனை வர்த்தகர்களுக்கு விற்பனைச் செய்ய எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பகுதியில் பிரதேச வாசிகள் குடிநீர் வழங்குமாறு கோரி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடுமையான வறட்சி காரணமாக அனைத்து பிரதேசங்களிலும் இன்று மக்கள் குடிப்பற்கும் நீர் இல்லாத நிலையில் துன்பப்பட்டு நிற்கின்றனர். இதனடிப்படையில் இன்று தாண்டியடி கிராம மக்கள் தமக்கு குடிப்பதற்காவது தண்ணீர் வழங்குமாறு கோரி சுலோக அட்டைகளை தாங்கியவாறு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாளத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளார். வங்காள விரிகுடாவை அண்மித்த வலய நாடுகளில், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட டெக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, ஜனாதிபதி அங்கு பயணமாகவுள்ளார்.

இந்த மாநாடு, நான்காவது தடவையாக நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாளத்தில் தங்கியிருக்கும் காலத்தில், நேபாளம் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவாரென்றும், லும்பினி நகரத்தையும் பார்வையிடவுள்ளாரென, ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவும் வரட்சி நிலமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது.

இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் பிரதேசத்திலுள்ள குடிநீர் பிரச்சனையுள்ள கிராமங்கள், மற்றும் அரச அலுவலங்கள், ஆலயங்கள், பாடசாலைகள், மரணவீடுகள், பொலிஸ் நிலையங்கள், பொதுமக்களின் விஷேட நிகழ்வுகளுக்கும் தங்குதடையின்றி பிரதேச சபையின் பவுசர் மூலம் நாளாந்தம் குடிநீர் வழங்கிவருவதாக போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன் ரஜனி தெரிவித்தார். Read more