Header image alt text

வடக்கு கிழக்கில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ஏலவே 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக கோரப்பட்டிருந்த நிதியின் ஒரு பகுதி கிடைக்கப்பெற்றதுடன், எஞ்சிய பகுதிக்கான அனுமதி கடந்த வாரம் வழங்கப்பட்டது. முழுமையான நிதி கிடைக்கப்பெற்றதும் குறித்த காணிப் பரப்பு விடுவிக்கப்படும்.
Read more

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஆரம்பித்து வைக்க உள்ளார். இராணுவ ஆக்கிரமிப்பில் நீண்டகாலமாக இருந்து வந்த, பழைமைவாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், அண்மையில் விடுவிக்கப்பட்டது.

வடக்கின் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்து மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ் சிறைச்சாலைக்கு மேலதிக கட்டிடங்களை கட்டுவதற்கு எதிராக யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபையின் அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக இந்த கட்டிடங்கள் கட்டப்படுவதாக, ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனடிப்படையில் குறித்த நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும், இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உரிய தரப்புக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரைமேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் சிறைக்கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் பாதுகாப்பாக கீழிறக்கி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

வெலிகடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்குரிய சிறைக்காப்பாளரை (ஜெய்லர்) இடமாற்றம் செய்தமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்திய பெண் சிறைக்கைதிகள், அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரியும், வெளியிருந்து சிறைக்கைதிகளுக்கு கொண்டுவரப்பட்ட உணவுகளை மட்டுப்படுத்துவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். Read more

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான ஈடுபாடு இல்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலை நடத்துவதற்கு பொது தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் உத்தியோகபூர்வ காலம் கடந்த வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

இலங்கைக்கான வெளிநாட்டு இராணுவ நிதித் திட்டத்தின் கீழ் 39 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸின் அனுமதியின் கீழ் இந்த நிதி பயன்படுத்தப்படும் முறை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பின் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது. Read more

வெலிகடை சிறைச்சாலை கூரை மேல் ஏறி பெண் கைதிகள் சிலர் முன்னெடுக்கும் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் சட்டத்தின் படி தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் காலை தொடக்கம் வெலிக்கடை சிறைச்சாலை கூரையின் மீது ஏறி 10 பெண் கைதிகள், தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்யுமாறு கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘டெசிக் பீ.எம்.எஸ்.எஸ்’ காஷ்மீர் கப்பல் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நான்கு நாட்கள் பயணத்துக்காக வருகை தந்துள்ள குறித்த கப்பல், நாட்டில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் இலங்கையின் முக்கிய கப்பல் துறைமுகங்களுக்கு செல்லவுள்ளதுடன் கப்பலில் வருகை தந்துள்ளவர்கள், இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நட்புறவு கைப்பந்து போட்டியொன்றிலும் பங்கேற்கவுள்ளனர். Read more

யாழ்ப்பாணம், கோப்பாய், இருபாலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றுமாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்தவர்களை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read more

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஜனாதிபதி தலையிட வேண்டும் என கோரி மூன்றாவது நாளாக இன்றும் அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது.

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேவர்லி தோட்ட பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை இருவரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் குறித்த இருவரும் தொடர்ச்சியாக இரவு பகலாக எவ்வித உணவும் இன்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். Read more