Header image alt text

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார். கானா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அவர் உயிரிழக்கும்போது வயது 80 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உயர் இராஜ தந்திரியாக பதவி வகித்த முதலாவது கறுப்பின ஆபிரிக்கராக அவர் அறியப்படுகிறார். மனிதாபிமான நடவடிக்கைக்காக நோபல் பரிசு வென்ற கொபி அனான், மிகவும் அமைதியான முறையில் இயற்கை எய்தியதாக கொபி அனான் அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இதுசுணோரி ஒனோஜெரா (Itsunori Onodera)எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய விஜயத்தின் போது அவர் 20ம் திகதி இலங்கைக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் இதுவாகும். அவர் இவ் விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தற்போது செயற்பாட்டுக் கொண்டிருப்பதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மே மாதம் 01ம் திகதி முதல் அந்த உடன்படிக்கை அமுலுக்கு வந்துவிட்டதாகவும், சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதன் பின்பே இது செயற்பாட்டுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் தனியார் பிரத்தியே வகுப்புக்களை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்பிக்கப்பட உள்ளதாக புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் 02.00 மணி வரை மற்றும் போயா தினங்களில் தனியார் பிரத்தியே வகுப்புக்களை தடை செய்ய உள்ளதாக அவர் கூறியுள்ளார். அனைத்து மதங்களினதும் வேண்டுகோள் படி அந்த அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். Read more

மனித உரிமை தேசிய கொள்கையின் கீழ் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விசேட பொறுப்பொன்று வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி சட்டத்தரணி கலாநிதி மாரின்க சுமணதாஸ கூறியுள்ளார்.

அதன்படி விஷேட பிரிவொன்றை அமைத்து பொலிஸாரின் சித்திரவதைக்கு ஆளாவோர் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பது இதன்கீழ் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், அந்த இடம் தொம்பே பதுவத்த வலவ்வ என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லலித் அலஹகோன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொடர்பை மேற்கொள்ள தொலைபேசியில் மூன்று முறை முயற்சித்துள்ளார். Read more